சிக்கண்ணா கல்லூரி வளாகத்தில், நூற்றுக்கணக்கான பாம்புகள் படையெடுத்தன. இதனால், மற்ற அரசு பள்ளி, கல்லூரிகளிலும் புதர்களை சுத்தம் செய்ய வேண்டுமென, பெற்றோர் வலியுறுத்தினர்.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி வளாகத்தில் வடக்கு பகுதியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட பிரிவின்,
பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் அமைந்துள்ளது. இந்த அரங்கின் வலதுபுறம், கல்லூரி காம்பவுண்ட் சுவரை ஒட்டி புல், முள்செடிகள் வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது.இந்நிலையில், உள்விளையாட்டு அரங்கின் எதிரே, திறந்த வெளியில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி நேற்று துவங்கியது. முதல்கட்டமாக, டிராக்டர் கொண்டு, முட்புதர்கள் அகற்றப்பட்டது. அப்போது, திடீரென முட்புதருக்குள் மறைந்திருந்த பாம்புகள், படம் எடுத்தபடி வெளியே வர ஆரம்பித்தன.இதைக்கண்ட டிராக்டர் டிரைவர் அதிர்ச்சியடைந்து வண்டியை வேகமாக ஓட்ட, டயரில் சிக்கியும், புற்களை வெட்டும் கருவியில் மாட் டியும், பத்துக்கும் மேற்பட்ட பாம்புகள் இறந்தன. இதனால், டிரைவர் ஓட் டம் பிடித்தார். அருகில் உள்ளவர்கள் சமாதானம் செய்து பணியை தொடர்ந் தார். தினமும் வீரர், வீராங் கனைகள் விளையாட்டுகளுக்கு மைதானத்தில் பயிற்சி எடுத்து வரும் நிலையில், பாம்புகள் வலம் வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம், சிக்கண்ணா கல்லூரி வளாகம் முழுவதும் மற்றம் பல்நோக்கு விளையாட்டு அரங்கை சுற்றியும் உள்ள முள்செடிகளை அகற்றி, பாம்புகளை பிடிக்க, உரிய நட வடிக்கை எடுக்க வேண் டும், என்று விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.பள்ளிகளிலும்இதே நிலை...திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் கல்லூரிகள் என, பெரும்பாலான இடங்களில் வளாகம் மற்றும் மைதானங்களில் முட்புதர்கள் படர்ந்து கிடக்கின் றன. கோடை விடுமுறை விடப்பட்டதால், பள்ளி, கல்லூரிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவில்லை. இதனால், பாம்புகள், விஷ ஜந்துகள் அதிகரித்திருக்க வாய்ப்பு உள்ளது.மாணவ, மாணவியர் மைதானத்தில் விளையாடுவதும், மதியம் உணவு சாப்பிடுவதுமாக உள்ளனர். இதுபோன்று முட்புதர்கள் அகற்றப்படாமல் படர்ந்து கிடப்பதால், விஷ ஜந்துகளால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம், கல்வித்துறையினர் இணைந்து அரசு பள்ளி, கல்லூரிகளில் வளர்ந்து உள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும்.சமூக ஆர் வலர் சுந்தரபாண்டியன் கூறுகையில், ""பெரும்பாலான அரசு பள்ளி, கல்லூரி வளாகங்களை முறையாக பராமரிக்க வேண்டும்,'' என்றார்.