'கீழ் கோர்ட்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு, மருத்துவக் கல்விக்கு உள்ள, 'நீட்' நுழைவுத் தேர்வு போன்ற, தேசிய அளவிலான பொதுத் தேர்வு நடத்தலாம்' என, மத்திய அரசு பரிந்துரைத்து உள்ளது.
நாடு முழுவதும் உள்ள கீழ் கோர்ட்களில் அனுமதிக்கப்பட்ட நீதிபதி பணியிடங்கள், 20 ஆயிரத்து, 502 ஆகும். கடந்த, 2015, டிச., 31 நிலவரப்படி, 4,452 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கீழ் கோர்ட்களில் காலியாக உள்ள பணியிடங்கள், மாநில ஐகோர்ட் மற்றும் மாநிலபணியாளர் தேர்வு வாரியங்கள் நடத்தும் தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன.
உத்தரவு:
இதற்கு மாற்றான வழிமுறைகளை கண்டறியும்படி, சட்ட அமைச்சகத்துக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி ஆய்வு செய்த சட்ட அமைச்சகம், சுப்ரீம் கோர்ட்டுக்கு, சமீபத்தில் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பணியிடங்களுக்கு தேர்வு நடத்துவது போல, நீதிபதிகள் பணியிடங்களுக்கும், அனைத்திந்திய நீதித்துறை சேவை என்ற முறை யில் தேர்வு நடத்தி, நிரப்பலாம் என, 60 ஆண்டு களுக்குமேலாக பேசப்பட்டு வருகிறது.
நுழைவுத் தேர்வு
ஆனால், இதற்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. மருத்துவப் படிப்புகளுக்கு தற்போது உள்ள நீட் நுழைவுத் தேர்வு பாணியில், நீதிபதிகள் பணியிடங்களுக்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தலாம். இந்தத் தேர்வை, சி.பி.எஸ்.இ., நடத்த உத்தர விடலாம் அல்லது தனியாக ஒரு அமைப்பை உருவாக்கி, தேர்வு நடத்தலாம். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.
கோடை விடுமுறை முடிந்த பின், இது குறித்து, சுப்ரீம் கோர்ட் ஆலோசித்து, தன் பதிலை தெரிவிக்கும் என,எதிர்பார்க்கபடுகிறது.