சுதந்திர இந்தியாவில் முதல் வாக்கைப் பதிவு செய்தவருக்கு இன்று 100 வயது!!!


சுதந்திர இந்தியாவில் முதல் வாக்கினை பதிவு செய்த ஷியாம் சரன்

நேகிக்கு 100 வயதாகிறது. இதனை அந்த கிராம மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

இமாச்சலப் பிரதேசம் கின்னௌர் மாவட்டத்தில் பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்தவர் ஷியாம் சரண் நேகி. இவர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1951ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முதல் வாக்கினை பதிவு செய்தவர்.

இவரை கௌரவிக்கும் வகையில், 2010ம் ஆண்டு தேர்தல் ஆணையராக இருந்த நவீன் சாவ்லா, கின்னௌர் மாவட்டத்துக்குச் சென்று நேகியை சந்தித்தார். பிறகு 2014ம் ஆண்டு, ஹிமாச்சலப் பிரதேசத்தின் தேர்தல் ஆணையத் தூதராக நேகி நியமிக்கப்பட்டிருந்தார்.

ஆங்கில ஊடகத்துக்கு தொலைபேசியில் பேட்டி அளித்த நேகி, 'நான் முதன் முதலாக எனது வாக்கினை பதிவு செய்த அந்த நாள் இன்னும் கூட எனக்கு நினைவில் இருக்கிறது. அதன்பிறகு நாடும் பல விஷயங்களும் இன்று மாறிவிட்டன' என்றார்.

இதுவரை அவர் 16 முறை மக்களவைத் தேர்தலிலும், 12 முறை சட்டப்பேரவைத் தேர்தலிலும் வாக்களித்துள்ளார் என்கிறது தேர்தல் ஆணையத்தின் அறிக்கை.


1917ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பிறந்த நேகிக்கு, இன்று 100 வயதாகிறது. தன்னுடைய தளராத வயதிலும், அனைவரும் தவறாமல் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்று அனைவரையும் வலியுறத்தி வருகிறார்.

அவரது 100வது பிறந்த நாளைக் கொண்டாட அவரது குடும்பத்தினர் ஏற்கனவே தயாராகிவிட்ட நிலையில், அவரது கிராமத்தினரும் கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...