ஜூலை 20ம் தேதி இன்ஜினியரிங் கவுன்சலிங்? ?அண்ணா பல்கலை தகவல்


அண்ணா பல்கலைகழகத்தில் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு
ஜூலை 20ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைகழகம், அதன்கீழ் செயல்படும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பல்கலைகழகம் ஒரே தவணையாக மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வினை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தலுக்கான ஆன்லைன் பதிவு மே மாதம் 1ம் தேதி தொடங்கி மே 31ம் தேதி முடிந்தது. அதில் 1.48 லட்சம் மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்தனர். இன்ஜினியரிங் விண்ணப்பித்தவர்களுக்கான, ரேண்டம் எண் ஜூன் 20ம் தேதி வெளியிடப்பட்டது.

ஜூன் 22ம் தேதி பொதுப் பாடப்பிரிவு, வொக்கேஷனல் பாடப்பிரிவு என இரு தரவரிசை பட்டியல்கள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் மருத்துவ மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் இன்ஜினியரிங் கலந்தாய்வை நடத்த திட்டமிட்டுள்ளனர்.  ஜூலை 14ம் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதைதொடர்ந்து ஜூலை 17ம் தேதி கவுன்சலிங் தொடங்குகிறது. 19ம் தேதிக்குள் முதல்கட்ட கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது. முதல்கட்ட கலந்தாய்வில் மருத்துவம் படிக்க தகுதியுள்ள மாணவர்கள் அந்த கல்லூரிகளில் சேர்ந்து விடுவார்கள் என்பதால், ஜூலை 20ம் தேதி இன்ஜினியரிங் கலந்தாய்வை தொடங்க அண்ணா பல்கலைகழக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...