முதல்வர் நிகழ்சிக்கு 10,000 மாணவர்ககளை அழைத்து வர உத்தரவு : தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை !!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வரும் 22-ம் தேதி பல்லடத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள பயனாளிகளை அழைத்து வர அந்தந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி பேருந்துகளை காலை ஏழு மணிக்கே ஊராட்சி ஒன்றிய அலுவலத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வாய்மொழி உத்தரவிட்டுள்ளார்.


அன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடவும், வண்டிக்கான டீசல் செலவை பள்ளி நிர்வாகமே ஏற்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் K.S.பழனிசாமி தலைமையில் நடக்கும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தியிடம் விளக்கம் கேட்டதற்கு, "காலையில் முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி உள்ளது.
அதே மேடையில் மதியம் அரசு பள்ளியில் மேல்நிலை கல்வி பயிலும் 9,000 மாணவர்கள், தனியார் பள்ளியில் பயிலும் ஆயிரம் மாணவர்கள் என 10,000-மாணவர்கள் பயன் பெரும் மோட்டிவேசன் நிகழ்ச்சி உள்ளது.இதற்காகத்தான் தனியார் பள்ளி வாகனங்களை கேட்டுள்ளோம்.
 முதல்வர் விழாவுக்கும் இதற்கும் தொடர்பில்லை..." என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...