நாட்டின் 14- வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் வெற்றி


நாட்டின் 14- வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த்
வெற்றிப் பெற்றுள்ளார்.  குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது.


இதனையடுத்து நாட்டின் 14வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தேர்தலில், 4,120 எம்எல்ஏக்களும், 776 எம்.பிக்களும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். சுமார் 99 சதவீத வாக்குகள் பதிவாகின.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.  மொத்தமுள்ள 10 லட்சத்து 98,882 வாக்குகளில் 5.50 லட்சத்துக்கு மேல் வாக்குகளை பெற்று பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் ராநாத் கோவிந்த் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த தேர்தலில் 99 சதவீத வாக்குகள் பதிவாகின. பிற மாநிலங்களில் இருந்து வாக்கு பெட்டிகள் தில்லியில் நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டன. இந்த ஓட்டுக்களை எண்ணும் பணி இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.

மொத்தம் 8 சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதன் முடிவில் 5.50 லட்சத்துக்கு மேல் வாக்குகளை பெற்று பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் பெற்று நாட்டின் 14வது குடியரசு தலைவர் ஆகியுள்ளார்.

ராம்நாத் கோவிந்த் 65.65 சதவீத வாக்குகள் பெற்றார். இத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட மீராகுமார் 34 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...