10 மடங்கு வேகத்தில் பி.எஸ்.என்.எல்!


பாரத் சன்சார் நிகம் லிமிடெட் (BSNL), பிராட்பேண்ட் இணைய வேகத்தை 1,000 எம்.பி.பி.எஸ். வரை
அதிகரித்துள்ளது. இதுவரையில் பிராட்பேண்ட் பைபர் ஆப்டிக்கல் அதிகபட்ச வேகம் 100 எம்.பி.பி.எஸ்-ஆக மட்டுமே இருந்தது.

மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை (14.07.2017) அன்று இந்தப் புதிய சேவையைத் தொடக்கி வைத்தார். அடுத்த தலைமுறை பைபர் ஆப்டிக்கல் அடிப்படையிலான தொழில்நுட்பத்தில் (NG-OTH) இந்த புதிய சேவை அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இணைய வேகத்தை பத்து மடங்கு அதிகரித்துள்ளது பி.எஸ்.என்.எல் நிர்வாகம்.

NG-OTH தொழில்நுட்பத்தை பி.எஸ்.என்.எல் நிர்வாகம் வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக மாநில தலைநகர்கள், முக்கிய நகரங்கள் உள்ளிட்ட 44 இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள 100 நகரங்கள் இத்திட்டத்தில் இணைக்கப்படும் என்று மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, " இத்திட்டத்திற்கு ரூ.330 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நோக்கமே பி.எஸ்.என்.எல் ஆப்டிக்கல் ஃபைபர், பிராட்பேண்ட் உட்கட்டமைப்பு திறனை 10 ஜி.பியிலிருந்து 100 ஜி.பியாக அதிகரிப்பது தான். இதனால் இணைய வேகம் 10 மடங்கு அதிகரிக்கும்" என்று கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...