கருப்புப் பண வளையத்தில் 5,56,000 பேர்!


பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பின்னர் வருமான வரி தாக்கலின்போது
குறிப்பிட்ட வருவாயை விடக் கூடுதலான பணத்தை டெபாசிட் செய்ததாக சுமார் 5,56,000 பேரை வருமான வரித் துறையினர் கண்டறிந்துள்ளனர்.

நாட்டில் கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுப் புழக்கத்தை ஒழித்துக்கட்டும் நோக்கத்தில், உயர்மதிப்பு நோட்டுகளான ரூ.500 மற்றும் ரூ.1000 ஆகியவை மத்திய அரசால் நவம்பர் 8ஆம் தேதி செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. அதன் பின்னர் மதிப்பிழந்த இந்நோட்டுகளை டிசம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கிகளில் செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இவற்றை டெபாசிட் செய்வதற்கு வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தங்களது வருவாய் விவரங்களை விடக் கூடுதலாக டெபாசிட் செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அனைத்து டெபாசிட்களும் மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் எனவும் வருமான வரித்துறை சார்பாகவும் மத்திய அரசு சார்பாகவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து வங்கிகளில் முறைகேடாக வருவாய்க்கு மீறி அதிக பணத்தை டெபாசிட் செய்தவர்களைக் கண்டறிய ‘ஆபரேஷன் கிளீன் மணி’ என்ற திட்டத்தை வருமான வரித் துறை நடைமுறைப்படுத்தியது. இதன் முதற்கட்ட முயற்சியில் சுமார் 1.92 லட்சம் பேர் சிக்கினர். இவர்களில் சுமார் 9.72 லட்சம் பேரிடமிருந்து மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் வாயிலாக விளக்கம் கிடைத்துள்ளது. இன்னும் 1.04 லட்சம் பேரிடமிருந்து உரியப் பதில்கள் எதுவும் வரவில்லை. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி வருமான வரித்துறை இந்த ’ஆபரேஷன் கிளீன் மணி’ திட்டத்தின் இரண்டாம் கட்ட சோதனையைத் தொடங்கியது. அதில் சந்தேகத்துக்குரிய நபர்களின் வங்கிக் கணக்கு மற்றும் டெபாசிட் விவரங்களை ஆய்வு செய்தபோது, அவர்களில் 5.56 லட்சம் பேர் சிக்கியுள்ளனர். இவர்களிடம் விளக்கம் கேட்டு மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...