விதிகளை மீறி ரூ.11 கோடி பட்டுவாடா; மின் வாரியத்துக்கு 'குட்டு


ஒப்பந்த விதிகளை மீறி பெறப்பட்ட மின்சாரத்திற்காக கொடுக்கப்பட்ட, 11.45 கோடி ரூபாய்
கொடுத்தது முறையற்றது' என, மத்திய கணக்கு தணிக்கைத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த, அறிக்கை விபரம்: மின் வாரியம், 2013 ஜூன், 1 முதல், 2014 மே, 25 வரையிலான காலத்தில், 110 மெகா வாட் மின்சாரத்தை, ஆர்.கே.எனர்ஜி நிறுவனத்திடம் இருந்தும்; 5 மெகா வாட் மின்சாரத்தை, சாய் ரீஜென்சி பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்ய, 2013 ஜூனில் ஒப்பந்தம் செய்தது.

இரு ஒப்பந்தங்களிலும், மின் கொள்முதல் குறித்த ஒரே வித விதிமுறைகள் சேர்க்கப்பட்டிருந்தன. ஒப்பந்த அளவை விட கூடுதலாக, 10 சதவீத மின் சாரத்தை மட்டுமே, மின் வாரியம் ஏற்று கொள்ளும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டு இருந்தது.

மின் கொள்முதல் கோப்புகளை ஆய்வு செய்ததில், 2013 செப்., முதல், 2014 ஜூன் வரையிலான, எட்டு மாதங்களில், 70.11 கோடி யூனிட் மின்சாரத்தை, ஆர்.கே., நிறுவனம் வழங்கியது. அது ஒப்பந்த அளவான, 68.23 கோடி யூனிட்டை விட, 102 சதவீதம் அதிகம். 2013 ஜூலை முதல், செப்., வரையிலான மூன்று மாதங்களில், சாய் ரீஜென்சி வழங்கிய, 2.25 கோடி யூனிட் மின்சாரம், ஒப்பந்த அளவான, 1.98 கோடி யூனிட்டை விட, 112 சதவீதம் அதிகம்.

இவ்வாறாக, அதிக மின்சாரம் வழங்கியதற்காக, ஆர்.கே., நிறுவனத்திற்கு, 10.36 கோடி ரூபாயும்; சாய் நிறுவனத்திற்கு, 1.09கோடி ரூபாயும் மின் வாரியம் வழங்கியுள்ளது. ஒப்பந்த விதிகளின் படி, 10 சதவீதம் வரை, கூடுதலாக மின்சாரம் வழங்கும் போது, மின் வாரியத்தின் முன் அனுமதி அவசியம்.

எனவே, மின் வாரிய அனுமதி இன்றி, பெறப் பட்ட மின்சாரத்திற்காக கொடுக்கப்பட்ட தொகை, நிபந்தனைகளுக்கு மாறானது; அது முறையற்றது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...