வருமான வரி துறையின் இ சேவையில் பதிவு செய்துள்ள, 2.45 கோடி பேர் மட்டுமே
, ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்; 3.57 கோடி பேர், பான்- ஆதார் எண்ணை இன்னும் இணைக்கவில்லை.
ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்கள், வருமான வரி செலுத்த வேண்டும். ஆன்-லைனில் பதிவு செய்து, இ- ரிட்டர்ன் தாக்கல் செய்வது கட்டாயம். அவ் வகையில், நாடு முழுவதும், 6 கோடியே, 32 லட்சத்து, ஒன்பதாயிரத்து, 611 பேர், வருமான வரித்துறை யின், ஆன்-லைன் சேவையை பயன்படுத்தி, இ -ரிட்டர்ன் தாக்கல் செய்கின்றனர்.
தனி நபர் கணக்கு விபரங்களை முறைப்படுத்த வும், கண்காணிக்க ஏதுவாகவும், வருமானவரி துறை சார்பில், பான் கார்டு வழங்கப்படுகிறது. போலி பான் கார்டுகளை கட்டுப்படுத்தும் வகையில், பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாய மாக்கப்பட்டுஉள்ளது. வருமான வரி தாக்கலுக்கு, வரும், 31ம் தேதி கடைசி நாள். அதனால், பான் கார்டுடன், ஆதார் எண்இணைப்பதில், பலரும் ஆர்வம்காட்டி வருகின்றனர்.
இதுவரை, 3 கோடியே, 69 லட்சத்து, 84 ஆயிரத்து, 699 பேர், பான் கார்டுடன் ஆதார் எண் இணைத்துள் ளனர். ஆதார் எண் இணைத்துள்ளவர்களை, இரண்டு வகையாக பிரித்து, வருமான வரித்துறை விபரம் வெளியிட்டு உள்ளது.
அதன்படி, வருமான வரித்துறையின் இ -சேவை யில் பதிவு செய்துள்ளவர்களில், 2 கோடியே, 45 லட்சத்து, 38 ஆயிரத்து, 874 பேர் ஆதார் விபரங் களை இணைத்துள்ளனர். அதேநேரம், வருமான வரியில் பதிவு செய்யாத, ஒரு கோடியே, 24 லட்சத்து, 45 ஆயிரத்து, 825 பேர், பான் கார்டுடன் ஆதார் எண்இணைப்பை நிறைவு செய்துள்ளனர்.
வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: ரிட்டர்ன் தாக்கலுக்கு, பான் கார்டு -ஆதார் இணைப்பு கட்டாயம். அதனால், பான்- ஆதார் இணைப்பு வேக மாக நடக்கிறது. ஆண்டு வருமானம், 2.50 லட்சத்துக் கும் கீழ் உள்ள, வருமான வரி வரம்புக்குள் வராதோரும், ஆன்-லைன் சேவையை பயன்படுத்தாதோரும் கூட, ஆதார் இணைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். அவ்வகையில், இ- சேவையில் பதிவு செய்யாத, 1.24 கோடி பேர், ஆதார் விபரங்களை இணைத்துள்ளனர்.
ஆன்-லைனில் பதிவு செய்துள்ள, 6.32 கோடி பேரில், 3.57 கோடி பேர், ஆதார் விபரங்களை பான் கார்டுடன் இணைக்க வேண்டியுள்ளது. ரிட்டர்ன் தாக்கல் தேதி நெருங்குவதால், அனைவரும் உடனடியாக, பான்- ஆதார் எண் இணைக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.