ரயில் பயணிகளுக்கு குறைந்த விலையில் சுத்தமான குடிநீரை விற்பனை செய்ய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் ரயில் பயணிகளுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மலிவு
விலையில் விநியோகம் செய்ய ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. 450 ரயில் நிலையங்களில், 1100 தானியங்கி குடிநீர் வழங்கும் எந்திரங்களை அமைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் இத்திட்டம் நிறைவு பெற உள்ளதாகவும், இதன் மூலம் ரயில் பயணிகளுக்கு ஒரு பாட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ரூ.1-க்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. ஒரு பாட்டில் தண்ணீரானது 300 மில்லி லிட்டர் அளவு இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 2,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.