புதுச்சேரி உட்பட 29 நகரங்கள் பூகம்பத்தால் பாதிக்கும் அபாயம்: அதிர்ச்சித் தகவல்!!!


நாடு முழுவதும், புதுச்சேரி உட்பட, 29 நகரங்கள், கடும் பூகம்பத்தால் பாதிக்கக் கூடியவை
' என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

என்.சி.எஸ்., எனப்படும், தேசிய நிலநடுக்கவியல் மையம் கூறிஉள்ளதாவது: இதுவரை ஏற்பட்டுள்ள பூகம்பம் மற்றும் நிலநடுக்கங்கள், அவற்றால் விளைந்த பாதிப்பு, பூமியின் கீழ் பகுதிகளில் அமைந்துள்ள பாறைத் தட்டுகளின் நகர்வுகள் அடிப்படையில், நம் நாட்டின் நிலப் பரப்பு, இரண்டு முதல் ஐந்து வரையுள்ள மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நம் நாட்டில் நிகழும் நிலநடுக்கங்கள் குறித்த, ஆவணங்களை பாதுகாத்து வரும், என்.சி.எஸ்., அமைப்பு, ஐ.எம்.டி., எனப்படும், இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மண்டலம் இரண்டில் உள்ள பகுதிகள், நிலநடுக்க நடவடிக்கைகள் மிகவும் குறைவாக நிகழக்கூடியவை. அடுத்தடுத்த நிலையில் உள்ள மண்டலங்கள், கூடுதல் நிலநடுக்கங்கள் ஏற்படும் வாய்ப்புள்ள பகுதிகளாக உள்ளன.

நான்கு மற்றும் ஐந்தாவது மண்டலங்களில் இடம்பெற்றுள்ள பகுதிகள், அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளாக கருதப்படுகின்றன.நாடு முழுவதும், மண்டலம், இரண்டு முதல், ஐந்து வரையுள்ள பகுதி களில், 29 நகரங்கள் உள்ளன. டில்லி, பாட்னா, ஸ்ரீநகர், கோஹிமா, புதுச்சேரி, கவுகாத்தி, காங்டாக், சிம்லா, டேராடூன், இம்பால், சண்டிகர் ஆகிய நகரங்கள், நான்கு மற்றும் ஐந்தாவது மண்டலங்களின் கீழ் வகைப்படுத்தப் பட்டுள்ளன.

வடகிழக்கு பிராந்தியம் முழுவதும் மற்றும் ஜம்மு - காஷ்மீர், ஹிமாச்சல், உத்தரகண்ட், குஜராத்தில், கட்ச் பகுதியை சேர்ந்த, ரான், வடக்கு பீஹார் ஆகியவற்றின் சில பகுதிகள், நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கக்கூடிய, ஐந்தாவது மண்டலத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அசாம் முதல், ஜம்மு - காஷ்மீர் வரையிலான பகுதி, மிக, மிக அதிகளவில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதியாக கருதப்படுகிறது. இவ்வாறு, என்.சி.எஸ்., கூறியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...