தமிழகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறையின் செயல்பாடுகள், ஏறத்தாழ முடங்கி விட்டதாக
குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நிர்வாகக் குளறுபடி, நடைமுறைச் சிக்கல்கள், கறுப்பு ஆடுகளின் ஊடுருவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், லஞ்சப் பேர்வழிகளுக்கு எதிரான கைது நடவடிக்கைகள், தோல்வியடைந்து உள்ளதாகவும், புகார்கள் எழுந்து உள்ளன.
'லஞ்ச ஒழிப்புத்துறை' என அழைக்கப்படும், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, சமீபநாட்களாக, கடும் விமர்சனங் களுக்கு உள்ளாகியிருக்கிறது. அரசுத் துறை களில், நாளுக்குநாள் பெருகி வரும், ஊழல், லஞ்ச முறைகேடுகள் குறித்து, பொதுமக்கள் தரப்பில் ஆதாரப்பூர்வமாக புகார் அளித்தாலும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்ற, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
'அரசுத் துறைகளில், 1,000, 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கும் அடிமட்ட ஊழியர்களைப் பிடிக்கும் வேகத்தை, கோடிக்கணக்கில் ஊழல் புரியும் அரசியல்வாதிகள் மற்றும் அரசுத்துறை அதி காரிகள் மீது காட்டுவதில்லை' என, வெளிப் படையாகவே விமர்சனங்கள் எழுகின்றன.
இயக்குனர், இணை இயக்குனர், துணை இயக்குனர், கண்காணிப்பாளர்கள், துணைக் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என, பல நுாறு பேருடன் இயங்கும் லஞ்ச ஒழிப்புத் துறையில், நான்கு சட்ட ஆலோசகர்கள், 34 துணை சட்ட ஆலோசகர்கள், தொழில்நுட்ப உதவிக்கு தனி அதிகாரிகள் என, பெரும் படை உள்ளது.
இந்த படையினரால், 2015 - 16ல், லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை, தமிழகத்தில், 82 பேர் தான். இவர்களில் பெரும்பாலானோர், மின் வாரியம், வருவாய்த் துறை என, குறிப்பிட்ட சில துறை களில் பணியாற்றும் அடிமட்ட அலுவலர்கள், பணியாளர்கள். ஆனால், 2014 - 15ல், லஞ்ச வழக்கில், கைது செய்யப்பட்டோ ரின், எண்ணிக்கை 171. அடுத்த ஆண்டில், இந்த கைது, பாதியாக குறைந்துள்ளது.
காரணம் என்ன?
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறைக்கு, உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணியாற்றும் போலீஸ் அதிகாரி களை நியமிக்கும் முன், அவர்களது ஒழுக்கப் பின்னணி கூர்மையாக ஆராயப்படும். 'கை சுத்தமான'வர்கள் மட்டுமே, இத்துறையில்
நியமிக்கப்பட்டனர். தற்போது, அரசியல், அதிகாரிக ளின் செல்வாக்குடன், சிபாரிசு பெற்ற, முறைகேடு பேர் வழிகள், பலரும் ஊடுருவி விட்டனர். இவர்கள், 'கை நிறைய வருமானம்' பார்த் தவர்கள். நேர்மை யற்ற இவர்கள், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு எதிராக புகார்கள் வந்தால் கைது நடவடிக்கை எடுப்பனரா, என்பது தான், பலரும் எழுப்பும் கேள்வி.
இந்த கறைபடிந்த அதிகாரிகளில் சிலர், லஞ்சம் கேட்பதாக புகார் அளிக்க வருவோரின் விபரங்களை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கே தெரிவித்து, 'கூலி' பெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இது போன்ற முறைகேடுகளால், கைது எண்ணிக்கை குறைந்து வரும் சூழலில், நடைமுறைச் சிக்கல் களும் அதிகரித்து விட்டன.
அனுமதிக்கு காத்திருப்பு
அரசுத் துறையில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், லஞ்சம் கேட்பதாக, பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்தால், லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விட முடியாது.அவர், தனக்கு மேல் உள்ள, டி.எஸ்.பி., வழியாக, கண்காணிப்பாளருக்கு, எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும். அவர், சில கேள்விகளை, சந்தேகங்களை எழுப்புவார். அதற்கு, இன்ஸ்பெக்டர் விளக்கம் அளித்து, தெளிவுபடுத்த வேண்டும். அதன்பிறகே, அனுமதி கிடைக்கும்.
இந்த நடைமுறைக்கே, சில நாட்கள் ஓடிவிடும்; அதற்குள், புகார்தாரர் வெறுத்துப் போய்விடுவார் அல்லது லஞ்ச ஒழிப்புத்துறையினர் எங்கே தம்மை காட்டிக் கொடுத்து விடுவார்களோ என, பயந்து ஓடிவிடுவார். அதிகாரிகளின் இழுத்தடிப்பால், இதுபோன்ற சம்பவங்கள், சமீபகாலமாக அதிகரித்து விட்டதாக கூறப்படுகிறது.
'ஆடியோ டேப்' இருக்கா?
அதுமட்டுமின்றி, 'அரசுத்துறை அதிகாரி லஞ்சம் கேட்கிறார்' என, ஒருவர் புகார் அளிக்க வந்தால், அவரிடம், 'வாய்ஸ் ரெக்கார்டிங்' செய்து வருமாறு, சமீபகாலமாக, லஞ்ச ஒழிப்புத் துறையினர் வற்புறுத்துகின்றனர். அதாவது, புகார்தாரர், தன் மொபைல் போன் அல்லது பிரத்யேகமான, 'வாய்ஸ் ரெக்கார்டர்' சாதனத்தை, தன்னுடன் எடுத்துச் சென்று, சம்பந்தப்பட்ட லஞ்சம் கேட்கும் அதிகாரியை சந்தித்து உரையாட வேண்டும். அவர், 'எனக்கு, 5,000 ரூபாய் லஞ்சம் தா' என, கேட்கும் உரையாடலை, அவருக்கு தெரியாமல், பதிவு செய்து, அதை, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
அந்த ஆடியோவை, உயர் அதிகாரிக்கு அனுப்பி ஒப்புதல் பெற்ற பிறகே,இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்வார்.இங்கு தான் சிக்கலே எழுகிறது. முதல் முறை லஞ்சம் கேட்டதால் தான், பாதிக்கப்பட்ட நபர் புகார் அளிக்க வந்தார். அதே நபர், லஞ்சம் கேட்ட அதிகாரியை மறுபடியும் சந்தித்து, 'சார் உங்களுக்கு லஞ்சம் எவ்வளவு வேண்டும்' எனக் கேட்டால், அவர் உஷாராகிவிடமாட்டாரா. இ