ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிர
, பீகார் முதல்-மந்திரி பதவியை நேற்று திடீரென்று ராஜினாமா செய்த நிதிஷ்குமார், பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் சேர்ந்து மீண்டும் ஆட்சி அமைக்க முடிவு செய்தார்.
சாத்துடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து
நிதிஷ்குமார் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, பீகார் மாநில பாரதீய ஜனதா தலைவர் சுஷில்குமார் மோடி நேற்று மாலை கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து, நிதிஷ்குமார் புதிய அரசு அமைக்க பாரதீய ஜனதா ஆதரவு அளிப்பதாக கூறி கடிதம் கொடுத்தார்.
இதையடுத்து, பாரதீய ஜனதா ஆதரவுடன் இன்று நிதிஷ் குமார் முதல் அமைச்சராக பதவியேற்க உள்ளார். துணை முதல் மந்திரியாக சுஷில் குமார் மோடி பதவியேற்கிறார். நிதிஷ் குமாரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ள ஆளுநர் திரிபாதி, நிதிஷ் குமார் தனது பெரும்பான்மையை நிரூபிக்க 2 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார்.
நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் 71 எம்.எல்.ஏக்களும் பாரதீய ஜனதா கூட்டணியில் 58 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். இதன் காரணமாக நிதிஷ் குமார் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதில் சிக்கல் இருக்காது என தெரிகிறது.