4 நாட்களுக்கு அதிக வெப்பம்': வானிலை மையம் எச்சரிக்கை


தென்மேற்கு பருவமழை வலு குறைந்து காணப்படுவதால்
, தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

28% மழை குறைவு:

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: தமிழகம் மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை வலு குறைந்து காணப்படுகிறது. இதனால் கடந்த 3 நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஜூலை 24ம் தேதி வரை 100 மி.மீ., மழை பெய்திருக்க வேண்டிய நிலையில், 70 மி.மி., மழையே பெய்துள்ளது. இந்த ஆண்டு 28% குறைந்து பெய்துள்ள மழை, 2016ல் 3 சதவீதமும், 2015ல் 7 சதவீதமும், 2014ல் 11 சதவீதமும் குறைவாக பெய்துள்ளது.

4 நாட்களுக்கு..

தமிழகத்தில் இன்று முதல் 28ம் தேதி வரை அதிகமாக வெப்பத்தின் தாக்கம் இருக்கும். கடலோர மாவட்டங்களை காட்டிலும் உள்மாவட்டங்களில் இயல்வை விட 3 முதல் 4 டிகிரி அதிக வெப்பம் நிலவும். ஜூலை 29 முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...