அரசு பள்ளியில் அதிக கட்டணம் மாணவியர் உள்ளிருப்பு போராட்டம்!!!


பூந்தமல்லி அரசு மகளிர் பள்ளியில், அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி, மாணவியர்
உள்ளிருப்பு போராட்டம் நடத்திய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பூந்தமல்லியில், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இதில், 200 பேர் படிக்கின்றனர்.
இந்நிலையில், பள்ளியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவியர், 70க்கும் மேற்பட்டோர், நேற்று வகுப்புகளை புறக்கணித்து, பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். போலீசார் பேச்சு நடத்தியதை அடுத்து, மாணவியர் கலைந்து சென்றனர்.
பின், ஆசிரியர், பெற்றோர் மற்றும் பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகள் இணைந்து, இதுகுறித்து கூட்டம் நடத்தினர். அதில், வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, கூட்டம் பாதியில் கைவிடப்பட்டது.
மாணவிகள் கூறியதாவது:அரசு பள்ளியில் படிக்கும் எங்களுக்கு, 2,000 - 3,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். இது, பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இதற்கு முறையான ரசீதும் வழங்குவதில்லை. இது குறித்து கேட்டால், ஆசிரியர்களும், பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகளும் மிரட்டுகின்றனர். பெற்றோர் கேட்க வந்தால், முறையான பதில் அளிப்பதில்லை. தனியார் பள்ளியில் படிக்க வசதி இல்லாத காரணத்தால் தான், அரசு பள்ளியில் படிக்க வருகிறோம். கழிப்பறைக்கு, மாணவிகளே தண்ணீர் எடுத்து செல்லும் நிலை உள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
அரசு பள்ளியில் படிக்கும் எங்களுக்கு, 2,000 - 3,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். இது, பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இதற்கு முறையான ரசீதும் வழங்குவதில்லை

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...