இந்தியாவில் 55% பேருக்கு ஜி.எஸ்.டி., என்றால் தெரியவில்லை!!!


 இந்தியாவில் 55 சதவீதம் பேருக்கு ஜி.எஸ்.டி., குறித்த புரிதல் இல்லை என ஆய்வு அறிக்கை
ஒன்று தெரிவித்துள்ளது.

ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி, ஜூலை, 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த வரி விதிப்பு குறித்து, 'வே 2 ஆன்லைன்' என்ற நிறுவனம், 3.50 லட்சம் பேரிடம், ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அதன் விபரம்: இந்திய மக்கள் தொகையில், பாதிக்கும் குறைவாக, அதாவது, 45 சதவீதம் பேருக்கு, ஜி.எஸ்.டி., குறித்து தெரிந்திருக்கிறது; 55 சதவீதம் பேருக்கு, அது குறித்த புரிதல் இல்லை.

தெலுங்கு மொழி பேசும் மாநிலங்களில், ஜி.எஸ்.டி., குறித்த விழிப்புணர்வு அதிகம் உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் மக்கள் தொகையில், 64 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு, ஜி.எஸ்.டி., பற்றி தெரிந்திருக்கிறது. அதில், 42 சதவீதம் பேர், ஜி.எஸ்.டி.,யால் நன்மை கிடைக்கும் என, தெரிவித்து உள்ளனர்; 58 சதவீதம் பேர், பயனிருக்காது அல்லது தெரியவில்லை என, பதிலளித்து உள்ளனர்.

தமிழகத்தில், ஜி.எஸ்.டி., குறித்த விழிப்புணர்வு மிகக் குறைந்த அளவிற்கே உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...