ஜனாதிபதி தேர்தல்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை!!!

ஜனாதிபதி தேர்தலில், யாருக்கு ஓட்டளிக்க வேண்டுமென, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு,
சம்பந்தப்பட்ட கட்சிகள் உத்தரவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல், வரும், 17ல் நடக்கிறது. இதில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி சார்பில், ராம்நாத் கோவிந்தும், காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில், மீரா குமாரும் போட்டியிடுகின்றனர். ஜனாதிபதி தேர்தலில், எம்.பி.,க்களும், எம்.எல்.ஏ.,க்களும் மட்டுமே ஓட்டளிக்க தகுதி பெற்றவர்கள். ஓட்டுச் சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படுகிறது.

யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என, கட்சி தலைமையோ, கொறடாவோ, எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இந்நிலையில், 'கட்சி தலைமையின் முடிவுக்கு எதிராக, ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போட்டால், பதவி பறிபோகுமா' என, தேர்தல் கமிஷனிடம், எம்.எல்.ஏ.,க்கள் சிலர் கேட்டுள்ளனர்.

இதையடுத்து, தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜனாதிபதி தேர்தலில், வேட்பாளருக்கு ஆதரவாக, யாரும் பிரசாரம் செய்யலாம். ஆனால், இவருக்கு தான் ஓட்டு போட வேண்டும் என, கட்சி தலைமையோ, கட்சியின் கொறடாவோ, உத்தரவு பிறப்பிக்கக் கூடாது. ஓட்டளிப்பதோ, புறக்கணிப்பதோ, வாக்காளர்களின் தனி உரிமை. கட்சித் தலைமையின் முடிவை மீறுபவர்கள் மீது, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க முடியாது. எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு கட்சி தலைமையோ, கொறடாவோ உத்தரவு பிறப்பித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...