ஜி.எஸ்.டி.,யில் ஏமாற்றினால் 5 ஆண்டு சிறையுடன் அபராதம் !!

 'ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையில், முறையான, 'இன்வாய்ஸ்' எனப்படும், பில் இல்லாமல் பொருட்கள் விற்பனை செய்தால் அல்லது வரி ஏய்ப்பு செய்தால், 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.



*ஐந்து ஆண்டுகள் வரை சிறை*

இது குறித்து, இந்திய கம்பெனி செயலர் மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையில், வரி ஏய்ப்பு செய்தாலோ; உரிய பில் இல்லாமல் பொருட்களை விற்பனை செய்தாலோ, அதிகபட்சம், ஐந்து ஆண்டுகள் வரை சிறையும், அபராதமும் விதிக்கும் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்துடன், உரிய பில்இல்லாமல் பொருட்களை அனுப்பினாலோ அல்லது சேவை செய்தாலோ, அது குற்றமாக கருதப்படும். அதேபோல், உள்ளீட்டு வரிப் பயனை பெறும் நோக்கத்துடன், எந்த பொருளையும் விற்காமல், போலியான பெயரில் பில் தயாரித்தலும் குற்றமாகும்.
பொருளை விற்காமலும், சேவை அளிக்காமலும், உள்ளீட்டு வரிப் பயனை பெறுவதும் குற்றமாக கருதப்படும். ஜி.எஸ்.டி.,யை வசூலித்துவிட்டு, மூன்று மாதங்கள் வரை, அதை அரசுக்கு செலுத்தாமல் இருப்பதும் குற்றம்.

*வரி ஏய்ப்பு செய்வோர்*

ஜி.எஸ்.டி., சட்டத்தின்கீழ், இவ்வாறு மோசடி செய்வோர், வரி ஏய்ப்பு செய்வோருக்கு, 5 கோடி ரூபாய் வரையிலான குற்றங்களுக்கு, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். 5 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது தொடர்பான குற்றங்களுக்கு, ஐந்து ஆண்டுகள் வரை சிறையும், அபராதமும் விதிக்கப்படும்.
இதை தவிர, தொடர்ந்து, இரண்டு முறைக்கு மேல் இந்த குற்றத்தில் ஈடுபடுவோருக்கு, ஐந்து ஆண்டு வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றங்களில் ஈடுபடுவோரை கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட, வரித்துறை கமிஷனர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...