வருமான வரி வசூல் ரூ.60 ஆயிரம் கோடி!!


தமிழகத்தில், 2016 - 17ல், வருமான வரி வசூல், 60 ஆயிரம் கோடி ரூபாயை கடந்தது
. நடப்பு நிதியாண்டில், 71 ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

வருமான வரி செலுத்துவது தொடர்பாக, தமிழகம் முழுவதும், பல இடங்களில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டில், தமிழகம், புதுச்சேரியில் உள்ள அலுவலகங்களில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, சிறப்பு கவுன்டர்கள் வழக்கம் போல் திறக்கப்படும். சென்னை, நுங்கம்பாக்கம், ஆயக்கர் பவனில், தேவையை பொறுத்து, 30க்கும் மேற்பட்ட, கவுன்டர்கள் திறக்கப்படும்.

தமிழகம் - புதுச்சேரி பிராந்தியத்தில், 2015 மார்ச், 31 வரை, 44 ஆயிரத்து, 661 கோடி ரூபாய் வருமான வரி வசூல் ஆனது. அது, 2016ல், 51 ஆயிரத்து, 497 கோடி ரூபாயாக அதிகரித்தது. 2016 - 17க்கு, 59 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயித்திருந்தோம். அந்த இலக்கை தாண்டி, 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாக, வருமான வரி வசூலாகி உள்ளது.

மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்துள்ளதையே இது காட்டுகிறது. நடப்பு நிதியாண்டில், தமிழகம், புதுச்சேரி பிராந்தியத்தில், 71 ஆயிரம் கோடி ரூபாய் வரி வசூலிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கணக்கு தாக்கலுக்கு10 நாட்களே அவகாசம்கடந்த நிதியாண்டுக்கான, வருமான வரியை மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யாதோர், ஜூலை, 31க்குள் தாக்கல் செய்ய வேண்டும். கணக்கு தணிக்கைக்கு தேவைப்படாத நபர்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, இன்னும், 10 நாட்களே அவகாசம் உள்ளது.

ருமான வரித் துறையின், http://incometaxindiaefiling.gov.in/ என்ற இணையதளத்தில், ஆன்லைனில் கணக்கு தாக்கல் செய்ய வசதி செயயப்பட்டுள்ளது. தமிழகத்தில், 75 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், ஆன்லைனில் கணக்கு தாக்கல் செய்கின்றனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...