ரஷியாவின் கிழக்கு கடற்கரை பகுதியை 7.7 ரிக்டர்
அளவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கி உள்ளது. இதனையடுத்து பசுபிக் பெருங்கடல் பகுதியில் சுனாமி ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ரஷியாவில் இருந்து ஹவாய் வரையில் 0.3 மீட்டர் அளவுக்கு மேல் சுனாமி அலைகள் தக்கலாம் என கணிக்கப்பட்டு உள்ளது என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்து உள்ளது. ரஷியாவின் நிகோல்ஸ்கேயோயிக்கு கிழக்கு-தென்கிழக்கில் சுமார் 199 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 11.7 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
ரஷ்யாவின் கம்சட்கா பெனிசுலா பகுதிக்கும், அலஷ்காவின் அலெயுடியன் பகுதிக்கும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் போது தொடர்ச்சியாக பல்வேறு அதிர்வுகளில் நில அதிர்வுகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது