காஷ்மீரில் 8-வது ராஷ்டிரிய ரைஃபிள்ஸ் படைப்பிரிவின் மேஜர் ஷிகார் தபா,
நேற்று இரவு ராணுவ வீரரால் சுட்டுக் கொல்லப்பட்டார். எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் புசார் சாவடியில் நிலைநிறுத்தப்பட்டு இருந்த படைப்பிரிவின் ராணுவ வீரர் நாய்க் கதிரேசன் பணியில் இருந்த போது தொடர்ந்து தொலைபேசியை பயன்படுத்தி வந்து உள்ளார். பணியின் போது வீரர்கள் செல்போன் பயன்படுத்துதலை தவிர்க்க வேண்டும் என மேனர் ஷிகார் தபா அறிவுரை வழங்கி வந்து உள்ளார். ராணுவ வீரர் நாய்க் கதிரேசன் பணியின் போது செல்போனை பயன்படுத்தியது தெரியவந்து உள்ளது. அவரை தபா எச்சரித்து உள்ளார். ஆனால் மீண்டும் அதே தவறை ராணுவ வீரர் செய்ததாக கூறப்படுகிறது.
பணியின் போது செல்போன் பயன்படுத்தியதாக ராணுவ வீரரின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அப்போது தபா மற்றும் ராணுவ வீரர் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் தபாவை பின்னால் இருந்து ராணுவ வீரர் தான் வைத்திருந்த ஏகே 47 ரக துப்பாக்கியால் சுட்டுவிட்டார். இதில் காயம் அடைந்த தபா உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது, முழு தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை