ஜனாதிபதி தேர்தலில் 77 செல்லாத ஓட்டுகள்!!!


நாட்டின் 14வது புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கு நடந்த
தேர்தலில் எம்.பி., - எல்.எல்.ஏ.,க்கள் போட்ட ஓட்டுகளில் 77 பேர் செல்லாத ஓட்டு போட்டுள்ளனர்.

செல்லாத ஓட்டுகள்:

ஜனாதிபதியை, எம்.பி., - எல்.எல்.ஏ.,க்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கின்றனர். ஜனாதிபதி பதவிக்கு நடந்த தேர்தலில், 77 பேர் போட்ட ஓட்டுகள், செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 21 ஓட்டுகள், எம்.பி.,க்களின் ஓட்டுகள். மேற்கு வங்க சட்டசபையில், 10 ஓட்டுகளும்; டில்லியில், ஆறு; மணிப்பூர், ஜார்க்கண்டில் தலா, நான்கு; உ.பி.,யில் இரண்டு ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இவற்றின் மொத்த ஓட்டு மதிப்பு, 20,942.

குறைவு:

ஒருவர், தன் முதல் முன்னுரிமையை குறிப்பிடாமல் இருந்தாலும், தேர்தல் ஆணையம் கூறியுள்ளபடி, தன் முன்னுரிமையை பதிவு செய்யாமல் இருந்தாலும், அந்த ஓட்டு செல்லாததாகி உள்ளது. இந்தத் தேர்தலில், தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள சிறப்பு பேனா மூலமே ஓட்டளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும், சொந்த பேனா கொண்டு வருவதற்கும் தடை விதிக்கப் பட்டிருந்தது. அதனால், செல்லாத ஓட்டுகள் எண்ணிக்கை குறைந்துள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...