நீட் தேர்வுகுறித்த பிரச்னையே இன்னும் தீரவில்லை...
நீதிமன்ற வழக்குகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. அகில இந்திய தேர்வைக் கண்டு தமிழக மாணவர்கள் பயப்படுகிறார்களா அல்லது பயமுறுத்தப்படுகிறார்களா? அகில இந்திய அளவில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் மூலம் படித்தால்தான், நீட் போன்ற அகில இந்திய அளவில் நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சிபெற முடியுமா? மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் நுழைவுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற முடியாதா? என்பதுகுறித்து அறிய, கல்வியாளர்களின் கருத்தறிந்தோம்.
கல்வியாளரும், தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் முதல்வருமான ஆயிஷா நடராஜன்:
"அகில இந்திய அளவில் கல்வியாளர்கள் ஒன்றுகூடி பாடத்திட்டங்களை வடிமைப்பதற்காக சில வரையறைகளை வகுத்திருக்கிறார்கள். இந்த வரையறைகளைப் பின்பற்றித்தான் சி.பி.எஸ்.இ-யும் மாநில அரசுகளும் பாடத்திட்டத்தைத் தயாரிக்கின்றன. என்.சி.ஆர்.டி-யில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தைத் தயாரித்தவர்களில் 37 சதவிகிதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்திய அளவில் பல விஷயங்களைச் சாதித்தவர்களாக இருக்கிறார்கள் தமிழ்நாட்டுக்காரர்கள். ஆனால், தமிழ்நாட்டில் நம்முடைய பாடத்திட்டங்களை உடனுக்குடன் மேம்படுத்தத் தவறிவிட்டோம்.
தமிழக பாடத்திட்டத்தில் மேல்நிலை வகுப்புப் பாடங்களை மேம்படுத்தி, பன்னிரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. சமச்சீர்க் கல்விப் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி எட்டு வருடங்கள் ஆகிவிட்டன. பாடத்திட்டங்களை உடனுக்குடனே மேம்படுத்தவேண்டியது அவசியம். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை மேம்படுத்தி ஏழு வருடங்களாகின்றன. சி.பி.எஸ்.இ பாடத்திட்டங்கள் சிறப்பானது எனச் சொல்லி, ஏழு வருடங்களாக மேம்படுத்தாமல் இருக்கும் பாடத்திட்டத்தை நாமும் கடைப்பிடிக்கக் கூடாது.
தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவில் போட்டிபோடுவதற்கு, பாடத்திட்டத்தையும் பாடம் கற்பித்தல் முறையையும் மாற்ற வேண்டும்; அனைத்து தேர்வுகளையும் எதிர்கொள்ளும்வகையில் தரமாக அமைக்க வேண்டும். ஆந்திராவில், பாடத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன; பாடப்புத்தகத்தை வழங்குவதில்லை. ரெஃபரன்ஸ் புத்தகங்களில் பெயர்களை மட்டும் குறிப்பிட்டிருப்பார்கள். தமிழ்நாட்டில் பாடத்திட்டங்களுக்குப் பதிலாகப் பாடப்புத்தகத்தை வழங்கிவிடுகிறோம்.
பாடப்புத்தகத்திலிருந்துதான் கேள்வி கேட்பார்கள் என மாணவர்களிடம் சொல்லிவைத்திருக்கிறோம். பாடப்புத்தகங்களை நகல் எடுக்கும் இயந்திரங்களாக மாற்றிவைத்திருக்கிறோம். இதனால், மாணவர்கள் சுயமாகச் சிந்தித்துப் பதிலளிக்கும் திறனை மழுங்கடிக்கிறோம். இந்த முறை மாற வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் தமிழகப் பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும்" என்றார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் நுழைவுத்தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கையின் முன்னாள் இயக்குநரும் பேராசிரியருமான முனைவர் நவநீதகிருஷ்ணன்:
சி.பி.எஸ்.இ பாடத்திட்டமும், தமிழக பாடத்திட்டமும், பாடம் நடத்தும் முறையிலும் பெரிய அளவில் மாற்றம் இல்லை. திறமையான மாணவர்கள் இருக்கிறார்கள். ஆனால், தேர்வு நடத்தும் முறையில்தான் மிகவும் பின்தங்கியுள்ளோம்.
பொதுத்தேர்வில் எல்லாவற்றையும் பாடப்புத்தகத்திலிருந்தே கேட்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறோம். புத்தகத்தில் இல்லாத சுயமாகச் சிந்தித்து விடையளிக்கும் வகையில் கேள்விகளைக் கேட்டால், பாடப்புத்தகத்துக்கு வெளியே இருந்து கேள்வி கேட்டிருக்கிறீர்கள் என போனஸ் மதிப்பெண் கேட்கும் நிலையை உருவாக்கியிருக்கிறோம். இதற்குப் பள்ளியை நடத்துபவர்களும் ஆசிரியர்களும் துணைக்கு வருகிறார்கள். இதனால் மாணவர்கள் எதையும் சுயமாகச் சிந்திக்க முடியாதபடி செய்துவிட்டோம்.
புத்தகத்தில் இருப்பது மாதிரியான வினாக்களில் இருந்துதான் கேட்க வேண்டும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது மிகப்பெரிய தவறு. இந்த வினாக்களுக்கு மட்டும் பதிலைத் தெரிந்துகொண்டு தேர்வு எழுதி 200-க்கு 200 மதிப்பெண் வாங்குகிறார்கள். புரிதலே இல்லாமல் மனப்பாடம் செய்வதே சரி என்று தயார்செய்துவிட்டோம். இதை மாற்றினால் மட்டுமே அனைத்து தேர்வுகளையும் எதிர்கொள்ள முடியும்.
சி.பி.எஸ்.இ தேர்வின் கேள்வித்தாள்கள், தமிழக தேர்வுகளிலிருந்து வேறுபட்டிருக்கும். கேள்விகள், புத்தகத்தில் இருக்கவேண்டிய அவசியமில்லை. பதில்களுக்கான பகுதிகள் மட்டும் புத்தகத்தில் இருந்தால் போதுமானது. 2006-ம் ஆண்டு வரை நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடத்திவந்தோம். அதைத் தொடர்ந்து வந்திருந்தால் இன்றைக்கு அகில இந்திய அளவில் நடக்கும் தேர்வுகளில் நம் மாணவர்கள் சிறப்பான இடத்தைப் பெற்றிருப்பார்கள்" என்கிறார் பேராசிரியர் நவநீதகிருஷ்ணன்.
கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன்:
"சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தோடு ஒப்பீடும்போது தமிழக பாடத்திட்டமே சிறப்பாகத்தான் இருக்கிற