எம்.எல்.ஏ.,க்களை தக்கவைக்க சம்பளத்தை உயர்த்திய பழனிசாமி


தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் உட்பட, அனைத்து, எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை
பெறுவதற்காக, அவர்களின் மாத சம்பளத்தை, முதல்வர் பழனிசாமி உயர்த்தி உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
ஜெ., மறைவுக்கு பின், முதல்வராக பன்னீர் செல்வம் பொறுப்பேற்றார். அவர் அப்பதவியில் தொடர்வதை, சசிகலா விரும்பவில்லை. அவர் முதல்வராக விரும்பி, பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்தார்.அவர், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கினார். எனினும், 123 எம்.எல்.ஏ.,க்களை தக்க வைத்துக் கொண்ட சசிகலா, முதல்வராக முயற்சித்தார். சொத்து குவிப்பு வழக்கில், அவரது சிறை தண்டனை உறுதியானதால், முதல்வர் வாய்ப்பு, பழனிசாமிக்கு கிடைத்தது.

முதலில், பன்னீர்செல்வத்தை ஆதரித்த மத்திய அரசை, தனக்கு ஆதரவாக திரும்பச் செய்தார். அடுத்து, சசிகலா குடும்பத்தை ஓரங்கட்டத் துவங்கி உள்ளார். தினகரனை கட்சியில் இருந்து
ஒதுக்கி வைப்பதாக அறிவித்தார். ஆனாலும், ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்ற தின கரன் துடிக்கிறார். அவரை, 37 எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்து உள்ளனர்.

தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களை இழுக்கும் பணியில், முதல்வரின்ஆதரவாளர்கள் ஈடுபட்டனர்; அதற்கு பலன் கிடைத்து உள்ளது. தன்னை ஆதரிக்கும், எம்.எல். ஏ.,க்களை தக்க வைக்க நடவடிக்கைகளை பழனிசாமி மேற்கொண்டு வருகிறார்.

சட்டசபை கூட்டத்தொடரில், எதிர்க்கட்சி, எம்.எல். ஏ.,க்களை சமாளிக்க, அவர்களின் 'தேவை'யை பூர்த்தி செய்து, அடக்கி வாசிக்க வைத்தார் பழனிசாமி. இதனால், பிரச்னைகள் எதுவுமின்றி, சட்டசபை கூட்டத்தொடர் அமைதியாக நடந்து முடிந்தது.

தி.மு.க., அடக்கி வாசித்தது என்ற குற்றச்சாட்டை பொய்யாக்க, சட்டசபை நிறைவு நாளில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், குட்கா விவகாரம் உட்பட பல்வேறு பிரச்னைகளை எழுப்பி, அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தினார். எனினும், சட்டசபை கூட்டத்தொடர் அமைதியாகமுடிந்துவிட்டது.

அத்துடன், தினகரன் பக்கம் செல்லும், எம்.எல். ஏ.,க்களை இழுக்க, எம்.எல்.ஏ.,க்களின் மாத சம்பளத்தை, 55 ஆயிரம் ரூபாயில் இருந்து, 1.05 லட்சம் ரூபாயாக, முதல்வர் உயர்த்தி அறிவித்துள் ளார். இதற்கு கட்சி வேறுபாடின்றி அனைத்து, எம்.எல்.ஏ.,க்களும், மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
அதிருப்தியில் இருந்த, தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ்போன்றோர் கூட, முதல் வரை பாராட்டி மகிழ்ந்தனர்.

எம்.எல்.ஏ.,க்களை தக்க வைத்துக் கொண்ட, முதல்வர் பழனிசாமி, அடுத்தகட்டமாக, கட்சியை தன் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார். அதை உறுதிப்படுத்தும் விதமாக, முதல்வர் பழனிசாமி ஆதரவு, எம்.எல்.ஏ., முருகுமாறன், சட்டசபையில் பேசு கையில், 'முதல்வர் பழனிசாமி தலைமை யில், அணிகள் இணையும்; இழந்த சின்னத்தை மீட்போம்' என்றார்.

முதல்வர் பழனிசாமியின் அதிரடி நடவடிக்கை கள், தினகரன் மற்றும் பன்னீர் தரப்பினரிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...