சென்னையில், சாஸ்திரி பவன் மற்றும் ராஜாஜி பவன் வளாகங்களில் இயங்கும்,
பல மத்திய அரசு அலுவலகங்கள், அங்கிருந்து காலி செய்ய முடிவெடுத்துள்ளன.
சென்னையில் உள்ள பல்வேறு மத்திய அரசு அலுவலகங்கள், நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவன் மற்றும் பெசன்ட் நகர் ராஜாஜி பவன் வளா கங்களில் இயங்குகின்றன. ராஜாஜி பவனில், போதை பொருள் தடுப்பு பிரிவு உள்ளிட்ட, 62 அலுவலகங்கள் இயங்குகின்றன.
இதுபோல், நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில், வெளியுறவு அமைச்சகம்,மத்திய மின் வாரியம், கம்பெனி விவகாரத் துறை உட்பட, 57 அலுவல கங்கள் அமைந்துள்ளன.இந்நிலையில், அங்கிருந்து காலி செய்ய பல துறைகள், திடீரென முடிவெடுத்துள்ளன.
இது குறித்து, மத்திய அரசு ஊழியர்கள் கூறியதாவது:
ராஜாஜி பவன் மற்றும் சாஸ்திரி பவன் கட்டடங் களை,மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கட் டுப்பாட்டில் உள்ள, சி.பி.டபிள்யூ.டி., என்ற, மத்திய பொதுப்பணித் துறை தான் கட்டியது. அங்கு, மத்திய அலுவலகங்களுக்கு இலவசமாக இடம் தரப்பட்டு இருந்தது. அதுபோல், மின் கட்டணம், குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை, சி.பி.டபிள்யூ.டி., செலுத்தியது.
இதற்கிடையே, நிதிச்சுமை அதிகரித்ததால், பரா மரிப்பு கட்டணங்களை, அந்தந்த துறையே செலுத்த வேண்டும் என, இரண்டு ஆண்டுகளுக்கு முன், சி.பி.டபிள்யூ.டி., உத்தரவிட்டது. இதனால், மாதம் ஒன்றுக்கு, 3 லட்சம் ரூபாய் வரை, மற்ற துறைகளின் செலவு எகிறியது.
இந்நிலையில், சமீபத்தில், சதுர அடிக்கு, 30 ரூபாய் என, அந்த அலுவலகங்களுக்கு, வாடகை நிர்ணயிக் கப்பட்டுள்ளது. அதனால், மேலும் சில லட்சம் ரூபாய் கூடுதலாக செலவிடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இதுவரை, தேவையின்றி அதிக இடத்தை ஆக்கிரமித்திருந்த பல துறை கள், அலறியடித்து, அந்த இடங்களை சரண்டர் செய்ய துவங்கி உள்ளன. இதனால், காலியிடம்
அதிகரித்துள்ளது.
காலியான இடங்களை, வெளியில் செயல்படும் மத்திய நிறுவனங்களுக்கு தர, பொதுப்பணித் துறை கருதி உள்ளது. இதற்கிடையே, வாடகை தொகையை செலுத்த முடியாமல், அங்கிருந்து வெளியேற சில துறைகள் முடிவெடுத்துள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்