ஐ.டி. இளைஞர்களுக்கு கல்யாணச் சந்தையில் மெளசு குறையுது...


மனித வாழ்க்கையில் மிக முக்கியமான மூன்று தருணங்கள் பள்ளித் தேர்வு
முடிவு, கல்லூரி வாழ்கை, திருமண வாழ்கை என்று சொல்லலாம்.

பெரும்பாலும் பள்ளித் தேர்வு முடிவுக்குப் பின் அதிக மதிப்பெண்கள் எடுத்த அனைவருமே தொழில்நுட்ப கல்வியை மேற்படிப்பாக தேர்ந்தெடுத்து, கை நிறைய சம்பளம் கிடைக்கும் ஒரு உத்தியோகத்தையே விரும்புவர்

அதற்கு காரணம் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விடும் என்பதோடு அதற்கு இணையான வசதி படைத்த பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொண்டு முற்றிலும் தன் வாழ்வின் தரத்தை மேம்படுத்திவிடலாம் என்ற நோக்கம் தான்.

ஆனால் எல்லோருக்கும் அப்படியான ஒருவாய்ப்பு அமைந்துவிடுவதில்லை என்றாலும் ஐ.டி துறையில் வேலை கிடைத்த அனைவருமே தன் வாழ்வை தன் விரும்பத்திற்கு அமைத்துக் கொள்ளும் வரம் பெற்றவர்களாகவே உலா வந்தனர். ஆனால் சமீபகாலமாக பல காரணங்களால் இந்தியாவில் உள்ள பிரதான ஐ.டி நிறுவனங்கள் தீவிரமான ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

இதனால் நிலைமை தலைகீழாகிவிட்டதாகவே பார்க்கப்படுகிறது.  டாலர் மதிப்பில் சம்பளம், பிரமாண்ட அலுவலகங்கள், புதிய பணிச்சூழல், வெளிநாடுகளில் சென்று பணியாற்றும் வாய்ப்பு, தேவை அனைத்தையும் உடனுக்குடன் பூர்த்தி செய்து மகிழ்ந்த காலம் என இருந்த அந்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டம் கடந்த  2014 டிசம்பரில், டி.சி.எஸ் நிறுவனம் மொத்தம் உள்ள 23 லட்சம் ஊழியர்களில் 10 சதவிகிதத்தினரைக் குறைக்க முயற்சித்தது.

இந்தியா முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பால் அந்த நடவடிக்கையைக் கைவிட்டது. ஆனால், இப்போது, `டாப் 10’ ஐ.டி நிறுவனங்கள் அனைத்தும் ஆள்குறைப்பில்  தீவிரமாக இறங்கியுள்ளன. இது ஐ,டி. துறையை நம்பியிருக்கும் தொழிலாளர்களை அதிர வைத்துள்ளது.

அதோடு திருமணச் சந்தையில் ஐ.டி துறையில் இருப்போருக்கு பெண் கொடுக்க தயங்குவதாகவும் தெரியவந்துள்ளது. காரணம் இன்றைய காலகட்டத்திலும் உத்தியோகம் புருஷலட்சணமாகப் பார்க்கப்படுவதுதான்.

மேலும் இதுகுறித்து திருமண தகவல் மையங்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் படி 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, ஐ.டி. துறையில் பணிபுரியும் வரன்களை தேடும் பெண்களின் சதவீதம் குறைந்துவிட்டது என தெரியவந்துள்ளது.

மேலும் இதுகுறித்து இந்தியாவின் மிகப் பெரிய திருமண வலைத்தளங்களில் ஒன்றான Shaadi.com இன் தலைமை நிர்வாக அதிகாரி கூறும் போது , ஷாடி.காமில், 7% பெண்கள்  அமெரிக்காவில் வருங்கால கணவனை தேடுகிறார்கள். அல்லது மருத்துவர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை தேடுகிறார்கள்  என்று தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...