ஐதராபாத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட மத்திய மந்திரி முக்தார் அபாஸ் நக்வி, கல்வி உதவித்தொகை பெற்று வரும் சிறுபான்மையின பெண்களின் திருமணத்திற்கு 51,000 ரூபாய் வழங்க மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
‘பல பெற்றோர்கள் திருமணத்திற்கு பணம் சேர்ப்பதற்காக பெண்களை பள்ளிக்கு அனுப்புவதில்லை. இத்திட்டத்தின் மூலம் சிறுபான்மையின பெண்களின் கல்வியானது மேம்படும். இது போன்று உதவித் தொகை கொடுப்பது அவர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே, பள்ளிகளுக்கு வரும் சிறுபான்மையின பெண்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
சிறுபான்மையின பெண்களின் மேம்பாட்டிற்காக நாடு முழுவதும் 100 மாவட்டங்களில் ’கரிப் நவாஸ்’ என்ற பெயரில் திறன் மேம்பாட்டு மையம் தொடங்கப்படும். இந்த மையங்களின் மூலம் சிறுபான்மையின மாணவிகளின் திறமையை வளர்க்கலாம். மேலும் இந்த மையங்களில் 3 மாத பயிற்சி வகுப்பு நடத்தப்படும். அந்த வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இது மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிக அளவில் ஏற்படுத்தும்’ என்றும் மத்திய மந்திரி நக்வி கூறினார்.