தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில்
வழக்கு தொடரப்பட்டது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கிடையிலான ஒதுக்கீட்டு இட பகிர்வு விகிதாசாரத்தை மாற்ற வேண்டும். அதுவரை, கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தன.இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி ரவிச்சந்திரபாபு, நடப்பு கல்வியாண்டில் கலந்தாய்வுக்கு தடை விதிக்க முடியாது. பொறியியல் படிப்புக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை, கவுன்சிலிங் மூலமே நிரப்பப்பட வேண்டும் எனக்கூறினார். தொடர்ந்து, தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை மாற்றியமைப்பது தொடர்பான மனு குறித்து ஒரு வாரத்தில் பதில் அளிக்க அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தார்