எய்ம்ஸ் மருத்துவமனை வழக்கில் ஆவணங்களைத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற
மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறினால் சுகாதார துறை செயலர் ஆஜராக நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வருகிறிது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆகஸ்ட் ஒன்றாம் தேதி சுகாதாரத்துறை தலைமை செயலர் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் ஆகஸ்ட் 7ஆம் தேதி நேரில் ஆஜராக நேரிடும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்துள்ளது.
மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக தமிழக அரசு இதுவரை எந்த பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது