ஜனாதிபதி தேர்தலில் மொபைல் போனுக்கு தடை


ஜனாதிபதி தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெறும் இடத்திற்கு, மொபைல் போன் எடுத்துச் செல்ல,
தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.

தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்: ஜனாதிபதி தேர்தல், ஓட்டுப்பதிவு நடைபெறும் இடத்திற்கு, மொபைல் போன் மற்றும் புகைப்படக் கருவி எடுத்துச் செல்லக் கூடாது

 ஓட்டளிக்கச் செல்லும் போது, எம்.பி.,க்கள் - எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்

 ஓட்டுச்சீட்டில், 'ரைட்' மற்றும், 'பெருக்கல்' குறியீடுகளை பயன்படுத்தினால், ஓட்டுச்சீட்டு செல்லாததாகி விடும்

 தேர்ந்தெடுக்க விரும்பும் வேட்பாளர் பெயருக்கு எதிராக உள்ள, விருப்ப வரிசை முறை கட்டத்தில், '1' என்ற எண்ணை குறிப்பிட வேண்டும்

 ஓட்டுச்சீட்டில், தங்கள் பெயரை எழுதுவதோ, கையொப்பமிடுவதோ அல்லது வேறு ஏதேனும் சொற்கள் எழுதுவதோ கூடாது

 ஓட்டுச்சீட்டை உருக்குலைக்கக் கூடாது

 முதலில் வழங்கப்பட்ட ஓட்டுச்சீட்டு கிழிந்தாலோ, சேதமடைந்தாலோ, வேறு புதிய ஓட்டுச்சீட்டு வழங்கப்படாது

 ஓட்டுச்சீட்டை, ஓட்டுப்பதிவு நடைபெறும் இடத்தை விட்டு, வெளியே எடுத்துச் செல்லக்கூடாது

 அமைதியையும், கண்ணியத்தையும் காக்க வேண்டும்.

இவ்வாறு தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது, ஓட்டுப்பதிவு நடைபெறும் இடத்திலும் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...