தமிழகத்தில் 12 மாவட்டத்தில் 'டெங்கு' - அமைச்சர் விஜயபாஸ்கர் ஒப்புதல்


தமிழகத்தில் 12 சுகாதார மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது,'' என
, அமைச்சர் விஜயபாஸ்கர் ஒப்புக்கொண்டுள்ளார்.

சிவகங்கை அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அவசர கால தாய், சேய் சிகிச்சைப் பிரிவு கட்டடம் மற்றும் உபகரணங்கள் திறப்பு விழாவில் பங்கேற்ற அவர் கூறியதாவது:மொத்தம் 12 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு உள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு தடுப்பு மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லுாரிகளில் தமிழக மாணவர்கள் சேர்க்கைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்றார்.

மாவட்ட அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்றபோதும், அவர்களுக்கான மருத்துவ குறிப்பில் வைரஸ் காய்ச்சல் என்றுதான் குறிப்பிடப்பட்டு வந்தது. அதே நோயாளிகள் வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்போது 'டெங்கு' என மருத்துவக் குறிப்பில் குறிப்பிட்டு வந்தனர். ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கர் இப்போதுதான் முதன்முறையாக, 'தமிழகத்தில் டெங்கு பாதிப்பு உள்ளது' என்ற உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: ஆண்டுக்கு ஒரு மருத்துவ கல்லுாரி அமைப்பதை அரசு கொள்கையாக கொண்டு உள்ளது. திண்டுக்கல்லில் 2 பேருக்கு மட்டும் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி உள்ளது.

11.68 கோடி ரூபாயில் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு நவீன உபகரணங்கள் மற்றும் 5 கோடி ரூபாயில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வசதியை ஏற்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் உட்பட 11 மாவட்டங்களில் தலா ரூ.20 கோடியில் மகப்பேறு ஒப்புயர்வு மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்படும். அதில், 24 மணி நேரமும் மயக்கவியல், அறுவை சிகிச்சை நிபுணர்கள், மகப்பேறு மற்றும் குழந்தைகள் டாக்டர்கள் இருப்பர்.

இன்னும் 2 வாரத்தில் அரசு மருத்துவமனைகளில் 1,224 டாக்டர்கள், 700 சிறப்பு டாக்டர்கள் நியமிக்கப்படுவர். மேலும் காலியாக உள்ள செவிலியர், டெக்னீசியன் பணியிடங்களும் நிரப்பப்படும். கடந்த 3 ஆண்டுகளில் 670 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர், என்றார்.பழநி:டெங்கு பரவியுள்ள பழநி, ஆயக்குடி பகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு செய்தார். பழநி, அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரித்தார். அனைத்து துறை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் நடந்தது.

அப்போது அவர் கூறியதாவது: ஒரு பகுதியில் 3 முதல் 5 பேர் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால், அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய 'சூப்பர் செக் குழு' அங்கு சென்று ஆய்வு நடத்தும்.

பழநி அரசு மருத்துவமனையில் தலைக்காய சிகிச்சை பிரிவு காலிப் பணியிடங்களை நிரப்பவும், அதை மாவட்ட மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தவும், பழநியில் சித்த மருத்துவக் கல்லுாரி, மூலிகைப் பண்ணை அமைப்பது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படும். பழநியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த உள்ளாட்சி அமைச்சரிடம் தெரிவித்து, நடவடிக்கை எடுத்து வருகிறேன் என்றார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...