கடனை வசூலிக்க செல்லும்போது விவசாயிகளிடம் ஜப்தி கூடாது:வங்கி அதிகாரிகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு !!

நாடு முழுவதும் 1995 முதல் இன்று வரை 3 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

 ‘விவசாயிகள் வாங்கிய வங்கி கடனை வசூல் செய்யும்போது அவர்களின் டிராக்டர் உட்பட பொருட்களை ஜப்தி செய்யக்கூடாது’ என்று வங்கி அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும்
பல்வேறு மாநிலங்களில் கடுமையான வறட்சி நிலவி வருவதால், விவசாயிகள் தற்கொலை அதிகமாகி உள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவி வருகிறது. இதனால், விளை நிலங்கள் வறண்டு, விவசாயம் செய்ய முடியாத பரிதாப நிலையில் விவசாயிகள் தவிக்கின்றனர். மேலும், விவசாயத்துக்காக  கூட்டுறவு வங்கிகள், தேசிய வங்கிகள் போ்ன்றவற்றில் வாங்கிய கடனை திரு்ப்பிச் செலுத்த முடியாமல் இருக்கின்றனர்.  கடனை திருப்பிச் செலுத்தும்படி வங்கி அதிகாரிகள் செய்யும் கெடுபிடிகளை தாங்க முடியாமலும், விவசாயம் பொய்த்த சோகத்திலும் விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர்.

தமிழகத்தில் மட்டும் 400 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. தற்கொலையை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், விவசாயிகள் வாழ்வை பாதுகாக்க பல்வேறு சலுகைகளை வழங்கும்படி வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் தற்கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் தாக்கல் செய்த பொதுநலன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இச்சங்கம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு நீதிபதி தீபக் மிஸ்ரா,கன்வில்கர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நரசிம்மாவும், விவசாயிகள் சங்கம் சார்பில் வக்கீல் ராஜாராமனும் ஆஜராகி வாதிட்டனர்.

நரசிம்மா கூறுகையில், ‘‘தமிழகத்தில் முழு வறட்சி இல்லை. ஆங்காங்கே ஒரு சில இடங்களில்தான் வறட்சி நிலவுகிறது’’ என்றார். அப்போது நீதிபதிகள் கூறியதாவது: விவசாயிகளின் தற்கொலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனப்போக்கு காட்டி வருவது வேதனையாக உள்ளது. கடனை வசூலிக்க செல்லும் வங்கி அதிகாரிகள், விவசாயிகளிடம் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது. அவர்களிடம் ஜப்தி செய்யக் கூடாது. வங்கிகள் கெடுபிடியுடன் நடந்து கொண்டால், மாநில அரசு அதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிகள் கெடுபிடி செய்தால், அதை அரசின் கவனத்துக்கு எடுத்து செல்லும் வழிமுறைகள் இருந்தால்,் அது பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

 விவசாயிகளின் தற்கொலையை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில்தான் அரசு ஈடுபட வேண்டுமே தவிர, அவர்கள் தற்கொலை செய்த பிறகு நிவாரணம் கொடுக்க அலைந்து ெகாண்டிருக்க கூடாது. மேலும், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தப்பட்ச ஆதார விலைக்கும் அதிகமான தொகை கிடைக்க அரசு முயற்சிக்க வேண்டும். இடைத்தரகர்களை கட்டுப்படுத்த வேண்டும்.   விவசாயிகளின் நலன் சார்ந்த விவகாரத்தில் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வது கட்டாயமானது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் இன்சூரன்ஸ் தவணைகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்பது பற்றி தெரிந்து கொள்ள நீதிமன்றம் விரும்பவில்லை. விவசாயிகளின் தற்கொலை தடுக்கப்பட வேண்டும். அதற்கு தேவையான அடிப்படையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

தற்கொலை செய்த விவசாயிகளின் எண்ணிக்கை
2009ல் -17,368
2010ல் -19,964
2011ல் -14,027
2012ல் -13,754
2013ல் -11,772
2014ல் -12,360
2015ல் -12,602.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...