கலெக்டரிடம் தகராறு: எம்எல்ஏ கைது!!!


 தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி எம்எல்ஏவை
போலீசார் கைது செய்து பெயிலில் விடுதலை செய்தனர்.

வாக்குவாதம்:

தெலுங்கானா மாநிலம் மகாபூபாத் மாவட்டத்தில் மரக்கன்று நடும் விழா மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது. விழாவில் மகாபூபாத் தொகுதி எம்.எல்.ஏ., சங்கர் நாயக் கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் பெண் கலெக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பெண்ணின் கையை பிடித்து இழுத்தார். இந்த காட்சி அங்குள்ள டிவிகளில் வெளியானது.இது தொடர்பாக கலெக்டர் போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து எம்எல்ஏ மீது ஐபிசி 353, 354, 509 பிரிவின் கீழ் கைது செய்தனர். தொடர்ந்து இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. விசாரணைக்கு ஆஜரான சங்கர் நாயக்கை போலீசார் கைது செய்தனர். பின்னர் சொந்த ஜாமினில் விடுதலை செய்தனர்.

மறுப்பு:

தனது மீதான குற்றச்சாட்டை சங்கர் நாயக் மறுத்துள்ளார். தான் கலெக்டர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளதாக கூறினார்.

எச்சரிக்கை:

இந்த சம்பவம் குறித்த கேள்விப்பட்ட முதல்வர் சந்திரசேகர ராவ், எம்எல்ஏவை கண்டித்துள்ளார்.சங்கர் நாயக் கலெக்டரை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டும். இது போன்று தொடர்ந்து நடந்து கொண்டால் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவார் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்த பிரச்னையை அமைதியாக தீர்க்குமாறு துணை முதல்வருக்கு உத்தரவிட்டுள்ளார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...