*மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% இடஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதமும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்படும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், இந்த உள் ஒதுக்கீட்டை எதிர்த்து சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் தர்னிஸ் குமார், வி.எஸ்.சசி சச்சின் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதேபோல் மேலும் 4 மாணவர்கள் அரசின் உத்தரவை எதிர்த்து மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் ஆணைக்கு தடை விதிக்கக் கூடாது என்று தமிழக அரசு வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த பிறகு நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பினை நீதிபதி ரவிச்சந்திரபாபு வழங்கினார்.
அதில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% இடஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்பட்டது. மேலும் எம்பிபிஎஸ் கலந்தாய்வுக்கு புதிய தரவரிசை பட்டியலை வெளியிட வேண்டும் எனவும் ஐகோர்ட் நீதிபதி தெரிவித்தார்.
இதனால் எம்பிபிஎஸ் கலந்தாய்வு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது. முன்னதாக ஜூலை 17ம் தேதி எம்பிபிஎஸ் கலந்தாய்வு நடக்க இருந்தது. உள்ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளதால் தற்போதைய சூழலில் நீட் தேர்வு அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வாய்ப்பு உள்ளது.