SSTA-FLASH :மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு: அரசாணையை ரத்து செய்தது ஐகோர்ட்




மருத்துவப் படிப்பில், 85 சதவீத உள் ஒதுக்கீடு அளித்து, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை
சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.நீட் தேர்வை தொடர்ந்து, தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாட திட்ட மாணவர்களுக்கு 85 சதவீத இட ஒதுக்கீடு செய்து மாநில அரசு அரசாணை வெளியிட்டது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தஞ்சாவூர், ஞானம் நகரைச் சேர்ந்த, தார்னிஷ்குமார் உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி ரவிச்சந்திரபாபு, வழக்கின் மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மருத்துவப் படிப்பில், 85 சதவீத உள் ஒதுக்கீடு அளித்து, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...