என்.எல்.சி: ஆசிரியர் நியமனத்தில் ஊழல் !!

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் அமைந்துள்ள என்.எல்.சி. நிறுவனம் நகர மக்களுக்கும், சுற்றுப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கும் உதவும் வகையில், கல்வித்துறை, மருத்துவத்துறை, விளையாட்டுத்துறை போன்றவைகள் தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களையும், பெற்றோர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறது.


இந்நிலையில், என்.எல்.சி. நிறுவனத்தின் சார்பில் நடைபெறும் கல்வி நிறுவனங்களில், ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக சுமார் இரண்டரை கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாகத் தகவல் தெரியவந்ததையடுத்து, சி.பி.ஐ. டி.எஸ்.பி. அனந்த கிருஷ்ணன் தலைமையில் கடந்த ஜூலை 14ஆம் தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது, ஊழல்கள் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதனால், என்.எல்.சி. கல்வி நிறுவன அதிகாரிகள் பெரும் பீதியடைந்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...