நீதிபதி கருத்தைத் திரும்பப் பெற வேண்டும்: ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!


ஒரு வழக்கு விசாரணையின்போது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்
, ‘தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர் சங்கங்களை ஏன் தடை செய்யக் கூடாது?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு தமிழ்நாடு அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் நேற்று ஜூலை 4ஆம் தேதி நீதிபதி கிருபாகரனின் கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் பந்தநல்லூரில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஒன்று தங்கள் பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி வகுப்பு தொடங்க அனுமதி கேட்டு தமிழக பள்ளிக் கல்வித்துறையிடம் மனு செய்திருந்தது. அதற்கு தமிழக அரசு அனுமதி தரவில்லை என்று கூறிவிட்டது. இதையடுத்து, அந்தப் பள்ளி நிர்வாகம், தங்கள் பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி வகுப்பு தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, நீதிபதி கிருபாகரன், தமிழக அரசைக் கேள்விக் கணைகளால் துளைத்தார். அப்போது, ‘அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களுடைய பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது? மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர் சங்கங்களை ஏன் தடை செய்யக் கூடாது?’ என்று கேள்வி கேட்டிருந்தார்.

இந்நிலையில், உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் நேற்று ஜூலை 4ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார்கள். அப்போது, “நீதிபதி கிருபாகரன் ஆசிரியர் சங்கங்களை ஏன் தடை செய்யக் கூடாது என்ற அவரது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். நீதிபதி கிருபாகரனின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் ஜூலை 6ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகளை மட்டும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கக் கோரி அவர்களை மட்டும் தனிமைப்படுத்தக் கூடாது. அனைத்து அரசு ஊழியர்களின் பிள்ளைகளையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கக் கூறினால் அதை வரவேற்போம். அரசுப் பள்ளிகளில் இன்னும் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலையே உள்ளது” என்று தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...