என்.ஆர்.ஐ.,களுக்கு ஓட்டுரிமை: அரசுக்கு ஒரு வாரம் அவகாசம்!!!

என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை அளிப்பது தொடர்பாக, ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

விளக்கம்:


என்.ஆர்.ஐ., எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, இங்கு நடக்கும் தேர்தலில் ஓட்டுரிமை அளிப்பது உள்ளிட்டவை தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 'என்.ஆர்.ஐ.,க்கள் ஓட்டளிக்க வசதியாக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் தேவையான திருத்தம் கொண்டு வந்தால், ஓட்டளிப்பதற்கான வழிமுறைகளை வகுக்க தயாராக உள்ளோம்' என, தேர்தல் கமிஷன் தெரிவித்திருந்தது.

அவகாசம்:

இந்த வழக்கு, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'என்.ஆர்.ஐ.,க் கள் தேர்தலில் ஓட்டளிக்க அனுமதிப்பது குறித்து தன் நிலைப்பாட்டை, மத்திய அரசு ஒரு வாரத்துக்குள் தெரிவிக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியுள்ளது.தேர்தல் கமிஷன் புள்ளி விபரங்களின்படி, வெளிநாடுகளில் உள்ள, ஒரு கோடிக்கும் மேற்பட்ட, என்.ஆர்.ஐ.,க்களில், 24 ஆயிரத்து, 348 பேர் தேர்தல் கமிஷனில் பதிவு செய்து உள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...