மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு தடை விதிக்க முடியாது!!!

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்காக ‘நீட்’ என்னும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வை சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) கடந்த மே மாதம் 7–ந் தேதி நடத்தியது. இந்த தேர்வை 12 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். ஆனால் பல்வேறு மொழிகளில் வெளியான கேள்வித்தாள்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. இது தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சென்னை
ஐகோர்ட்டின் மதுரை கிளை, ‘நீட்’ தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது.
இந்த இடைக்கால தடைக்கு எதிராக சி.பி.எஸ்.இ. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.சி.பந்த், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு, மதுரை ஐகோர்ட்டு விதித்த இடைக்கால தடையை ரத்து செய்ததோடு, ‘நீட்’ தேர்வின் முடிவை வெளியிட அனுமதி அளித்து ஜூன் 12–ந் தேதி உத்தரவிட்டது. அதே சமயம், மாணவர் சேர்க்கையும், கலந்தாய்வும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்று அப்போது நீதிபதிகள் கூறினார்கள். இதைத்தொடர்ந்து ‘நீட்’ தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில். சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், மோகன் சந்தான கவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மாணவர்கள் சிலர் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் வாதாடுகையில், ‘‘நீட் தேர்வுக்கான கேள்வித்தாள்கள் ஒவ்வொரு மொழியில் ஒவ்வொரு மாதிரி இருந்துள்ளது. இது மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பல மாணவர்கள் தங்கள் வாய்ப்பை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே ஏற்கனவே நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கும் தடைவிதிக்க வேண்டும்’’ என்று கூறினார்கள்.

சி.பி.எஸ்.இ. தரப்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், ‘‘இந்த தேர்வில் கேள்வித்தாள்கள் கசிவதை தடுக்கும் வகையில் 8 மொழிகளில் வெவ்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. சரியான முறையில் தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுக்கும் நோக்கில் மட்டுமே இப்படி கேள்வித்தாள்கள் தயாரிக்கப்பட்டன. இதில் யாருக்கும் எந்த விதமான உள்நோக்கமும் கிடையாது. இதில் தவறேதும் கிடையாது. நீட் தேர்வு முடிவுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டன. இப்போது மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் நிலையில் உள்ளது’’ என்று கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:–
நீட் தேர்வை இந்தியா முழுவதும் 12 லட்சம் மாணவ–மாணவிகள் எழுதி இருக்கிறார்கள். 6 லட்சம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இந்த சூழ்நிலையில் தேர்வை ரத்து செய்வது என்பது இயலாத காரியம். எனவே, நீட் தேர்வை செல்லாது என கூறி ரத்து செய்ய முடியாது. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கும் தடை விதிக்க முடியாது.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.

இந்த வழக்கு விசாரணையை வருகிற 31–ந் தேதிக்கு அவர்கள் ஒத்திவைத்து உள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...