துவைத்ததும் 'அயர்ன்' செய்யும் கருவி: இந்தியர் அசத்தல்


துணியை துவைத்த உடன், அது காயும் வரை காத்திருக்க வேண்டாம்; உடனேயே, '
அயர்ன்' செய்யும் வகையில், 'டிரையர்' எனப்படும் துணியை உலர்த்தும், புதிய கருவியை வடிவமைத்துள்ளார், அமெரிக்க வாழ் இந்தியர்.அமெரிக்காவின் டென்னசியில் உள்ள ஓக்ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருபவர், இந்தியாவை பூர்வீகமாக உடைய விரால் படேல்.

இவர், புதிய வகை டிரையரை வடிவமைத்து உள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது: துணியை துவைக்கும் வாஷிங் மெஷினில், டிரையர் வசதி இருக்கும். ஆனால், அதில், மிக வேகமாக இயக்கப்படுவதுடன், சூட்டை ஏற்படுத்துவதன் மூலம், துணிகளுக்கு இடையே உள்ள தண்ணீர் வெளியேற்றப்படும். அதன் பின், அதை காய வைத்து, சிறிது நேரத்துக்கு பிறகே, அயர்ன் செய்ய முடியும்.ஆனால், நாங்கள் வடிவமைத்துள்ள, 'அல்ட்ராசோனிக் டிரையர்' மூலம், துவைத்த துணியை, நேரடியாக இதில் பயன்படுத்தலாம்.
அது, துணிகளின் இழைகளுக்கு இடையே உள்ள தண்ணீரை உறிஞ்சி எடுத்து விடுகிறது. வழக்கமான டிரையரில், சூட்டின் மூலம் தண்ணீர் ஆவியாக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது.
ஆனால், புதிய டிரையரில், வெப்பம் இல்லாமலேயே தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. மேலும், அப்படியே அயர்ன் செய்து எடுத்து வைக்கலாம்; இது வழக்கமான டிரையரை விட, ஐந்து மடங்கு திறன் மேம்பட்டது.
வழக்கமாக, துணியை துவைத்து, காயவைத்து, அயர்ன் செய்வது போன்றவற்றுக்கு ஆகும் நேரத்தில், பாதி நேரம் தான், இதற்கு தேவைப்படும். மின்சார செலவும் குறையும்.இந்த புதிய டிரையரை சந்தைப்படுத்தும் வகையிலும், குறைந்த விலையில் கிடைக்கும் வகையிலும், சிறு மாற்றங்களை செய்து வருகிறோம். அடுத்த, இரண்டு முதல், ஐந்து ஆண்டுகளுக்குள், இது விற்பனைக்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...