5 ஆண்டு கணக்கு தாக்கல் செய்யாத என்.ஜி.ஓ.,க்கள் லைசென்ஸ் ரத்து


ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து, ஆண்டு வருவாய், செலவு கணக்கை சமர்ப்பிக்காத, 6,
000 அரசு சாரா நிறுவனங்கள், லைசென்ஸ் இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவை, வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற முடியாது.

எச்சரிக்கை:

இது குறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது: வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறும், என்.ஜி.ஓ., எனப்படும், அரசு சாரா நிறுவனங்கள், ஆண்டுதோறும், தங்கள் வருவாய், செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்; இவை, தங்கள் ஆண்டு கணக்கை, அபராதம் இன்றி தாக்கல் செய்ய, ஜூன், 14ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டது. இ - மெயில், எஸ்.எம்.எஸ்.,கள் மூலம், அவ்வப்போது எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டன. ஒரு மாத அவகாசம் அளித்த பின்னும், 5,922 என்.ஜி.ஓ.,க்கள் தங்கள் ஆண்டு வருவாய், செலவுக் கணக்கை தாக்கல் செய்யவில்லை.

லைசென்ஸ் ரத்து?

இதையடுத்து, கடந்த, ஐந்தாண்டுகளாக கணக்கு தாக்கல் செய்யாத, 5,922 அரசு சாரா அமைப்பு களுக்கு, விளக்கம் கேட்டு, 8ம் தேதி, உள்துறை அமைச்சகம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது. வரும், 23க்குள், விளக்கம் அளிக்காத, என்.ஜி.ஓ.,க்களுக்கு எதிராக, வெளிநாட்டு நன்கொடை கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சட்டப்படி, நடவடிக்கைக்கு ஆளாகும், என்.ஜி.ஓ.,க்கள், வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகள் பெற முடியாது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

காலாவதி :

நாடு முழுவதும், எப்.சி.ஆர்.ஏ., சட்டத்தின் கீழ், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, என்.ஜி.ஓ.,க்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், 11 ஆயிரம், என்.ஜி.ஓ.,க்கள், தங்கள் லைசென்ஸ்களை புதுப்பித்துக் கொள்ளும்படி, 2016, நவம்பரில், மத்திய அரசு உத்தரவிட்டது. இவற்றில், 3,500, என்.ஜி.ஓ.,க்கள் மட்டுமே, லைசென்ஸ் புதுப்பிக்க விண்ணப்பித்தன. மீதமுள்ள, என்.ஜி.ஓ.,க்களின் லைசென்ஸ்கள், காலாவதியானதாக கருதப்படுகிறது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...