சென்னை-திருச்சி சிறப்பு ரயில்கள் தெற்கு ரயில்வே அறிவிப்பு !!

பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், திருச்சி - சென்னை மார்க்கத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:*

*திருச்சி - சென்னை எழும்பூர் சூப்பர் பாஸ்ட் சிறப்பு கட்டண ரயில் (வ.எண்.06026) திருச்சியிலிருந்து ஆகஸ்ட் 5, 12, 19 மற்றும் 26ம் தேதிகளில் மதியம் 3.25 மணிக்கு புறப்பட்டு
சென்னை எழும்பூருக்கு அதே நாளில் இரவு 9.10 மணிக்கு வந்து சேரும். மறு மார்க்கமாக சென்னை எழும்பூரிலிருந்து ஆகஸ்ட் 9, 16, 23 மற்றும் 30ம் தேதிகளில் காலை 9.45க்கு புறப்படும் சிறப்பு ரயில் (வ.எண்.06025) அதே நாளில் மாலை 3.15 மணிக்கு திருச்சிக்கு சென்றடையும்*

*சென்னை எழும்பூர் - எர்ணாகுளம் சூப்பர் பாஸ்ட் சிறப்பு கட்டண ரயில் (வ.எண்.06033) சென்னை எழும்பூரிலிருந்து ஆகஸ்ட் 5, 12, 19 மற்றும் 26ம் தேதிகளில் இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு எர்ணாகுளத்துக்கு மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்றடையும். மறு மார்க்கமாக எர்ணாகுளத்திலிருந்து ஆகஸ்ட் 8, 22 மற்றும் 29ம் தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வ.எண்.06034) அடுத்த நாள் காலை 8 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்*

*சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (வ.எண்.06001) சென்னை எழும்பூரிலிருந்து ஆகஸ்ட் 4 மற்றும் 18ம் தேதிகளில் எழும்பூரிலிருந்து இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்றடையும்*

*வண்.82601 ஆகஸ்ட் 11 மற்றும் 24ம் தேதிகளில் எழும்பூரிலிருந்து இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்*

*மறு மார்க்கமாக திருநெல்வேலியிலிருந்து ஆகஸ்ட் 20ம் தேதி மதியம் 2.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வ.எண்.06002) மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். வண்டி எண்.82602 திருநெல்வேலியிலிருந்து ஆகஸ்ட் 15 மற்றும் 27ம் தேதிகளில் மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு வந்தடையும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...