யூஜிசி நெட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம் : சிபிஎஸ்


வரும் நவம்பர் மாதத்தில் நடக்கும் யூஜிசி நெட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம் என சிபிஎஸ்இ

இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிக்கையில், விண்ணதாரர்கள் மற்ற விபரங்களுடன் ஆதாரையும் இணைக்க வேண்டும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிப்போர் அனுமதி அட்டை மற்றும் ஹால்டிக்கெட்டுடன் ஆதார் அட்டையையும் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். யூஜிசி நெட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் துவங்கும்.
விண்ணப்பதாரர்கள் மற்ற விபரங்களுடன் ஆதார் எண்ணையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும். யூஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 30 . இந்த ஆண்டு நெட் தேர்வுகள் நவம்பர் 5 ம் தேதி நடக்கும். ஆன்லைன் விண்ணப்பத்தில் ஏற்படும் குழப்பங்களை தவிர்ப்பதற்காகவும், வெளிப்படை தன்மையை உறுதி செய்வதற்காகவுமே ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...