மாநில கவர்னர்கள் போன்ற, அரசியல் சட்டத்தை செயல்படுத்தும் உயர் பொறுப்பில் உள்ளவர்களை
, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஏன் கொண்டு வரக்கூடாது' என, சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மாநில கவர்னர்களின் அறிக்கைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியிட கோரி தாக்கலான வழக்கு விசாரணையின் போது, இந்த கேள்வியை, சுப்ரீம்கோர்ட் எழுப்பியது