கிண்டியில் உள்ள, ஐ.டி.ஐ.,யில் பயிற்சி பெற,
தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என, சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை, அரசு, ஐ.டி.ஐ., நிலையத்தில், தொழிற்நுட்ப பயிற்சி பெற, 14 - 40 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்கலாம்; பெண்களுக்கு, வயது வரம்பு இல்லை. விண்ணப்பதாரர், ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பினால், ஒவ்வொரு மாவட்டத்திற்கும், தனித்தனி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.பயிற்சியின் போது, மாதந்தோறும், 500 ரூபாய் உதவித் தொகையுடன், இலவச மடிக்கணினி, பாடப்புத்தகம், வரைப்பட கருவி, சீருடை, மிதிவண்டி, பஸ் பாஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில், விண்ணப்பிக்கலாம்.கிண்டி, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள, துணை இயக்குனர் அலுவலகத்தில், மேலும் தகவல்களை பெறலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது