ரேஷன் முறைகேடு தடுக்க விஜிலென்ஸ் குழு அமைப்பு


ரேஷன் பொருட்கள் அனைவருக்கும் சரியாக கிடைக்கிறதா என்பதை உறுதி செய்ய, ஒவ்வொரு
கடைக்கும், மக்களை உள்ளடக்கிய, விஜிலென்ஸ் குழு அமைக்கப்பட்டுஉள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும், மற்ற பொருட்கள் குறைந்த விலையிலும் விற்கப்படுகின்றன. ஆனால், பொருட்களை சரியாக சப்ளை செய்யாததால், ஏழை மக்கள் பாதிக்கப்படுன்றனர்.

இவற்றை தடுக்க, தற்போது, ரேஷன் கடை தோறும், விஜிலென்ஸ் குழுக்கள் அமைக்கப் பட்டு உள்ளன. இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர்கூறியதாவது: ஒரு ரேஷன்கடையில், 1,000 முதல், 1,500 கார்டுதாரர்கள் உள்ளனர். அவர்களில், ஐந்து - ஏழு பேர் அடங்கிய, விஜிலென்ஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதில், ஒருவர் தலைவராக வும், மற்றவர்கள் உறுப் பினர்களாகவும் செயல்படு வர். மொத்தம் உள்ள, 34 ஆயிரத்து, 700 ரேஷன் கடைகளுக்கும் குழு அமைக் கப்பட்டு உள்ளது. அதேபோல், வட்டம், மாவட்டம், மாநில அளவி லான, விஜிலென்ஸ் குழு உள்ளது.

வருவாய் கோட்டாட்சியரான, ஆர்.டி.ஓ., தலைமை யில் செயல்படும் வட்ட குழுவில், எம்.எல்.ஏ., தாசில்தார், உணவு வழங்கல் உதவி ஆணையர், வட்ட வழங்கல் அலுவலர், மக்கள் பிரதிநிகள் உள்ளனர். கலெக்டர் தலைமையிலான மாவட்ட குழுவில், எம்.பி., - ஆர்.டி.ஓ., - கூட்டுறவு இணை பதிவாளர், மக்கள்பிரதிநிதிகள், உறுப்பினர்களாக உள்ளனர்.

உணவு வழங்கல் துறை ஆணையர் தலைமையி லான மாநில குழுவில், கூட்டுறவு சங்க பதிவாளர், வாணிப கழக பொது மேலாளர், உணவு வழங்கல் இணை ஆணையர் ஆகியோர், உறுப்பினர்களாக உள்ளனர்.ரேஷன் கடை விஜிலென்ஸ் குழு, மாதம்தோறும் கூட்டம் நடத்தி, அந்த கடையில்உள்ள அனைவருக்கும் பொருட்கள் கிடைத்துள்ளதா என்பதை ஆய்வு செய்யும். தவறு இருப்பின், மாவட்ட உணவு ஆணைய குறைதீர் மன்றத்தில் புகார் தெரிவிக்கும்.

மற்ற விஜிலென்ஸ் குழு, இரு மாதங்களுக்கு ஒரு முறை கூடி, ஆய்வு செய்யும். இதன் மூலம், ரேஷன் பொருட்கள் சரியாக வழங்கப் படுவது உறுதி செய்யப்படும்.இவ்வாறு அவர்கூறினார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...