தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 3 வயது குழந்தையின் கண்ணில் இருந்து கண்ணீர்
ரத்தமாக வருவதை பார்த்து பெற்றோர்கள் அதிரிச்சி அடைந்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதரபாத்தை சேர்ந்த பெண் குழந்தை அஹானா(3). அழும்போது குழந்தையின் கண்ணில் இருந்து கண்ணீருக்கு பதிலாக ரத்தம் கண்ணீராக வரும் நிகழ்வை கண்டு பெற்றோர் அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்தனர்.
இதனையடுத்து குழந்தை அஹானாவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
குழந்தை ஹெமாடிட்ரோசிஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் குழந்தை கண்களில் இருந்து வரும் ரத்தம் குறைந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும், தனது குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க பிரதமரும், தெலங்கானா முதல்வரும் உதவ வேண்டும் என குழந்தையின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்