பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியர் ‘சஸ்பென்ட்


அவிநாசியில், துவக்கப்பள்ளியில் முறையாக பணிக்கு வராத ஆசிரியர்,
மாணவர்களின் சாலை மறியல் போராட்டத்தை அடுத்து, நேற்று ‘சஸ்பென்ட்’ செய்யப்பட்டார்.
அவிநாசி கைகாட்டிபுதூரில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு, 65 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு, செந்தாமரை கண்ணன் என்ற ஒரேயொரு ஆசிரியர் மட்டுமே உள்ளார்; அவரும் அடிக்கடி விடுப்பு எடுத்துவிடுவதால், முறையாக பாடம் நடத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இது குறித்து பெற்றோர் தரப்பில், கல்வித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும், பலனில்லை. இந்நிலையில், மாணவர்கள் நேற்று காலை, அவிநாசி கைகாட்டிபுதூரில் உள்ள பிரதான ரோட்டில், மறியலில் ஈடுபட்டனர். அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து, போலீசார் சென்று பேச்சு நடத்தினர்.
எனினும், மறியலைக் கைவிட மறுத்து, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை ஆசிரியர் ‘சஸ்பென்ட்’ இதனால், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கனகமணி உள்பட பலர் அவிநாசிக்கு சென்று, பெற்றோரிடம் பேசினர். அதில், கூடுதலாக ஒரு ஆசிரியர் நியமிக்கப்படுமெனவும், தலைமை ஆசிரியர் செந்தாமரை கண்ணன் ‘சஸ்பென்ட்’ செய்யப்படுவதாகவும் உறுதியளிக்கப்பட்டது.
பெற்றோர் கூறுகையில், ‘இங்கு பணியாற்றும் ஆசிரியர் செந்தாமரை கண்ணன், முறையாக பாடம் நடத்துவதில்லை. பள்ளியில், தூங்குகிறார். இவர் விடுப்பில் செல்லும் போது, பாடங்கள் நடத்தப்படாமல், மாணவர்கள் சிரமப்படு கின்றனர்,’ என்றனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...