மிசியஸ் என்ற செயற்கை கோள் மூலம் விண்ணில் இருந்து, கோபி பாலைவனத்தில்
போட்டான் ஒளித்துகள்களை அனுப்பி வெற்றிகரமாக டெலிபோர்ட் ஆய்வை நடத்தி உள்ளது. 500 கி.மீ. உயரத்தில் இருந்து இந்த ஒளிப்பரிமாற்றம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு முந்தைய ஆய்வுகளில் அமெரிக்க விஞ்ஞானிகள் 100 கி.மீ. தொலைவுக்கு டெலிபோர்ட் செய்ததே சாதனையாக இருந்ததை சீனா முறியடித்துள்ளது.
வியாழனின் சிவப்பு புள்ளி:
நாசாவின் ஜூனோ விண்கலம் வியாழன் கோளில் தென்பட்ட பெரும் சிவப்பு புள்ளியை துல்லியமாக படம் பிடித்து அனுப்பி உள்ளது. 9 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில், இதுவரை எந்த விண்கலமும் நெருங்காத அருகாமையில் சென்று இந்த துல்லியமான படம் எடுக்கப்பட்டு உள்ளது. ‘கிரேட் ரெட் ஸ்பாட்’ என்று குறிப்பிடப்படும் இந்த பகுதி சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பே அறியப்பட்டு இருந்தது. இருந்தாலும் அதுபற்றிய முழுமையான விவரங்கள் இன்னும் ஆராய்ந்து அறியப்படவில்லை. தற்போது ஜூனோ விண்கலம் அனுப்பிய புகைப்படங்களால், அந்தப்பகுதி 10 ஆயிரத்து 159 சதுர மைல் பரப்பளவு கொண்டது என்பது தெரியவந்துள்ளது. அது பற்றிய ஆராய்ச்சியை ஜுனோ தொடர்கிறது.
ஆறாவது பேரழிவு:
மக்கள் தொகை பெருக்கமும், அவர்களின் நுகர்வுதிறனும் பூமியின் வளங்களை வேகமாக காலியாக்கி வருவதுடன், பல்லுயிர்ச் சூழலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஏராளமான உயிரினங்களின் வாழ்விடங்களும், உணவுகளும், நீரும் மாசுபட்டும், தடைபட்டும் வருவதால் அவை வேகமாக அழிந்து வருகின்றன. இது பூமியின் பேரழிவுக்கு வழிவகுத்து வருகிறது என்று விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதுவரை 5 பெரும் பேரழிவுகள் நிகழ்ந்து பூமியில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் பலி கொண்டுள்ளன. அவற்றில் பல உயிரினங்கள் மீண்டும் உயிர்பெறவே இல்லை. படிமங்களாக மட்டுமே கண்டெடுக்கப்பட்டுள்ளன. முக்கியமாக பனியானைகளையும், டைனோசர்களையும் குறிப்பிடலாம். மனித இனத்தின் அதிவேக வளர்ச்சியால் மாறி வரும் பூமியின் சூழல், ஆறாவது பேரழிவு நடைபெற்று வருவதை உறுதி செய்வதாக விஞ்ஞானிகள் கருத்து கூறி உள்ளனர்.
சூரியனில் துளை :
நாசா விஞ்ஞானிகள் சூரியனில் உள்ள பெரிய துளையை கண்டுபிடித்துள்ளனர். 75 ஆயிரம் மைல்கள் அகலமுள்ள அந்த பெரும் துளையில் பூமியை புதைத்துவிடலாம். சூரியனின் மேற்பரப்பில் குளிர்ச்சியான பகுதியில் காந்தப்புல தாக்கத்தால் இந்த பெருந்துளை ஏற்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். நாசாவின் சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி ஆய்வுக்குழு இதை கண்டுபிடித்துள்ளது. இந்த பெருந்துளையால் ஏற்படும் கதிர்வீச்சு விளைவுகள் பற்றிய ஆய்வுகள் தொடர்கிறது.
திருவிழா ஆரம்பம் :
போகிமான் கோ விளையாட்டு பிரியர்கள் ஆண்டு தோறும் சிகாகோவில் போகிமான் கோ திருவிழாவை நடத்தி கொண்டாடி வருகிறார்கள். தற்போது முதல் முறையாக இங்கிலாந்திலும் போகிமான் கோ திருவிழா நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. வருகிற 22-23-ந் தேதிகளில் சிகாகோவில் விழா நடைபெறும் அதே வேளையில் இந்த விழாவை கொண்டாட இருக்கிறார்கள் இங்கிலாந்தின் போகிமான் விளையாட்டு பிரியர்கள். ஷெஸ்டர் கேஸ்டில் நகரில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது